2026 மே 07, வியாழக்கிழமை

அதிமதிப்பு வாய்ந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் தொடர்ந்து 12ஆவது வருடமாக இலங்கையின் அதி மதிப்பு வாய்ந்த வங்கி என்றும் தொடர்ந்து 6அவது வருடமாக நாட்டின் அதிமதிப்பு வாய்ந்த நிறுவன அமைப்பு என்றும் LMD சஞ்சிகையின் 2016ஆம் வருட அதிசிறந்த நிறுவனத்திற்கான மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி 'நேர்மைக்கு' இலங்கையில் முதல் தரம் என்ற நிலைப்பாட்டை தொடர்ச்சியாக 4ஆவது வருடமாக தக்க வைத்துள்ளது. நிதி செயற்பாட்டிற்கு முதல் தரம் என்று தொடர்ந்து இரண்டாவது வருடமாக வங்கித் தரப்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக வெளியிடப்பட்ட தரப்படுத்தலிலும் 10 துறைகளுக்குள் 6 துறைகளில் உள்ள 5 உயர் நிறுவனங்களுக்குள் ஒன்றாகக் கொமர்ஷல் வங்கி வந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி அதிமதிப்பு வாய்ந்த முதல் 5 நிறுவனங்களுள் ஒன்றாக தொடர்ந்து 2016ஆம் ஆண்டிலும் இருந்து வருகிறது. LMD சஞ்சிகை 2005ஆம் ஆண்டில் தரப்படுத்தலை ஆரம்பித்ததிலிருந்து அதன் வருடாந்த தரப்படுத்தலில் கொமர்ஷல் வங்கி அதிமதிப்பு வாய்ந்த வங்கியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அதிசிறந்த நிறுவனங்கள் பற்றிய LMD தரப்படுத்தலின் சமீபத்திய பதிப்பில் நாட்டில் மிகப் பெரியதும் மிகவும் பல்    வகைப்படுத்தப்பட்டதுமான பாரிய நிறுவனங்களும் உலகின் மிகப் பிரபல்யமான சில பல்தேசிய கம்பனிகளும் அடங்குகின்றன.

கொமர்ஷல் வங்கியின் முகாமைப் பணிப்பாளர், பிரதம நிறைவேற்றதிகாரி திரு. ஜெகன் துரைரட்ணம் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, 'நிறுவன ரீதியான இலங்கையின் விவரப் பட்டியலில் அதி உயர்வாகத் தரப்படுத்தப்பட்ட வங்கியாக இருப்பது குறித்து நாம் பெருமைப்படுவது நியாயமானதே. நேர்மை, நிதிச் செயற்பாடு ஆகியவற்றிலும் நாம் அதிஉயர் ஸ்தானத்தைப் பிடித்திருப்பது குறித்தும் நாம் மீண்டும் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தொலைநோக்காற்றல், சுறுசுறுப்பு, தர விழிப்புணர்வு, புதுமை காணல் ஆகியன வங்கி நடவடிக்கையில் குறிப்பாக முக்கியமானவை என்பதால் வங்கி இத்துறைகளில் சிறப்புற்று விளங்;குவதாக தரப்படுத்தப்பட்டமை ஒரு விசேட அம்சமாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .