2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

20 ஆண்டுகள் பூர்த்தியில் பன்னிபிட்டிய தனியார் வைத்தியசாலை

Gavitha   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிபிட்டிய தனியார் வைத்தியசாலை தனது 20ஆவது ஆண்டு நிறைவை இம்மாதம் 20ஆம் திகதி கொண்டாடுகிறது. அதேவேளை நிறைவு விழாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 25 ஆம் திகதி தலவத்துகொட கிராண்ட்மெனார்ட் ஹொட்டலில் சிறப்பாக நடத்துவததுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   

கடந்த இரு தசாப்த காலமாக நோயாளர்களது சுகநலன் விடயத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதன் விளைவாக மக்களின் நம்பிக்கையை வென்ற வைத்தியசாலையாக பன்னிபிட்டிய வைத்தியசாலை விளங்குகிறது. புதிய நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிப் பயணித்தல் மற்றும் தரத்தை முறையாக பேணி வருகின்றமையும் பன்னிப்பிட்டிய வைத்தியசாலையின் வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளது எனலாம்.   

நோயாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் உயர்த்தரத்திலான சேவையை கடந்த 20 வருடகாலமாக வழங்கி வருவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுகிறோம். அதே போன்று எதிர்காலத்திலும் இந்தச் சேவையை மேலும் விரிவாக்கி வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என பன்னிபிட்டிய தனியார் வைத்தியசாலையின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரும் பேராசிரியருமான ஆனந்த குருப்பு ஆராச்சி தெரிவித்தார்.   

20ஆவது ஆண்டு பூர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது, ஊழியர் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அதேவேளை இதற்கு பன்னிபிட்டிய வைத்தியசாலையில் நற்பணி சேவைகள் பலவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக சிறு நீரக நோயாளர்களுக்காக மிக குறைந்தக் கட்டணத்தில் சேவைகளை வழங்குவதுக்காக குருதியை வடிகட்டும் இயந்திரங்கள் இரண்டை எதிர்வரும் நவம்பரில் பொருத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   

தேவையற்றச் செலவுகளை நீக்கி நோயாளர்களிடம் நியாயமான கட்டணத்தை அறவிடுகின்றமை, ஏனைய தனியார் வைத்தியசாலைகளைவிட குறைந்தக் கட்டணத்தில் சேவையை வழங்குவது பன்னிபிட்டிய வைத்தியசாலையின் சிறப்பம்சமாகும். வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேர சேவையை வழங்கும் பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலையின் சகல பிரிவுகளுக்கும் ISO  9001:2008 தரச்சான்று பெற்றுள்ளன. அதிநவீன 5D அல்ட்ரா சவுண்ட் சோதனை, CT ஸ்கேன் பரிசோதனை அடங்கலாக உயர் தொழில்நுட்ப வசதிகளுடனான சேவைகள் குறைந்த கட்டணத்தில் இவ்வைத்தியசாலையில் கிடைக்கின்றன.   

மக்களின் நம்பிக்கைமிக்க குடும்ப வைத்தியசாலையாக பன்னிபிட்டிய தனியார் வைத்தியசாலை காணப்படுகிறது. பன்னிபிட்டிய தனியார் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் சிறந்த பயிற்சிப்பெற்ற ஊழியர் குழுவுடன் சிநேகபூர்வ சேவையினை பெற்றுக்கொள்ளலாம்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X