2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

10ஆவது குடும்ப சவாரி வெற்றியாளர்கள் தெரிவு

Gavitha   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃவ்பின், 10ஆவது குடும்ப சவாரி மெகா ஊக்குவிப்புத் திட்டத்தில், இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  

மொரட்டுவ, நாத்தாண்டி, நுகேகொடை, மாத்தறை மற்றும் கனேமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து வாடிக்கையாளர்களும் அவர்களின் குடும்பத்தவர்களுமே இந்த வாய்ப்பை வென்றுள்ளனர். இங்கிலாந்துக்கான சகல செலவுகளுடனும் கூடிய முழுமையான வாய்ப்பை இவர்கள் வென்றுள்ளனர். மேலும், 10 குடும்பங்களுக்கு டுபாய் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. 25 குடும்பங்கள் சிங்கப்பூர் செல்லவுள்ளன. 250 குடும்பங்களுக்கு லெஷர் வேர்ள்டில் ஒரு நாளை கழிக்கும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.  

இவர்களோடு சிங்கப்பூர் செல்வதற்காக வருட மத்தி குலுக்கலில் தெரிவு செய்யப்படும் மேலும் 25 குடும்பங்களும், லெஷர் வேர்ள்ட் சுற்றுப் பயணத்துக்கான மேலும் 250 குடும்பங்களும் இணைந்து கொள்ளவுள்ளன.  

இவ்வாண்டின் செலிங்கோ லைஃவ் குடும்ப சவாரித் திட்டத்தின் மூலம், உள்நாட்டு உல்லாசம் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பனவற்றுக்காக மொத்தம் 2,260 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்தத் திட்டத்தின் மூலம் நன்மை அடைந்தவர்கள் கிட்டத்தட்ட 20,000 பேராகும்.  

“சிறப்பான பத்து அண்டுகள் கழிந்துள்ளன. இன்னமும் இலங்கை காப்புறுதித் துறை வரலாற்றில், செலிங்கோ லைஃவ் குடும்ப சவாரி திட்டம் தான் மிகப் பெரியதும் மிக சுறுசுறுப்பானதுமான ஊக்குவிப்புத் திட்டமாக உள்ளது” என்று செலிங்கோ லைஃவ்வின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் கூறினார். “குடும்ப பிணைப்பை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான குறிக்கோளாகும். பல வெற்றியாளர்களைப் பொருத்தமட்டில் இந்த அனுபவமானது, அவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவமாகவும் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.  

கடந்த நான்கு வருட காலத்தில் செலிங்கோ குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டத்தின் வெற்றியாளர்கள் ஜப்பான் (2014) சுவிட்ஸர்லாந்து (2015) ஜேர்மனி (2016) இங்கிலாந்து (2017) என விஜயம் செய்யும் வாய்ப்பக்களை வென்றுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட்டில் அல்லது செப்டம்பரில் இந்த ஊக்குவிப்பு தொடங்கப்பட்டதும் புதிதாக எந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவோம் என்ற அறிவுப்பக்காக வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  

பத்தாவது ஊக்குவிப்புக்கான காலம், டிசெம்பர் 2016 உடன் முடிவடைந்தது. செயற்படு நிலையில் உள்ள நீண்டகால காப்புறுதிக் கொள்கைகளை வைத்திருப்பவர்கள், செலிங்கோ ஓய்வூதிய கணக்கு வைத்திருப்பவர்கள், புதிதாக காப்புறுதிக் கொள்கையொன்றை் பெற்று மூன்று மாத காலத்துக்கு தொடராகக் கொடுப்பனவுகளை செலுத்தியவர்கள் இந்த வெற்றிவாய்ப்பைப் பெறும் தகுதி உடையவர்கள். அவர்களின் கொள்கைகளின் பெறுமதி, ஓய்வூதிய கணக்கில் உள்ள மீதி என்பனவற்றின் அடிப்படையில் நான்கு வகைப் பிரிவுகளிலும் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெற முடியும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X