2026 மே 07, வியாழக்கிழமை

'செலான் Money Market' சேமிப்புக் கணக்கு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி அதன் புத்தம் புதிய சேமிப்புக் கணக்கான 'செலான் Money Market அறிமுகப்படுத்தியுள்ளது.

இக்கணக்கு, குறுகியகால முதலீடு மற்றும் நேரடி வருமானத்தை உறுதிப்படுத்தும் சிறந்த நிதி முகாமைத்துவத் திட்டம் ஒன்றினை நாடும் நிதி முகாமையாளர்களுக்கும் கம்பனிகளுக்கும் பெரும் பயனாக அமையவுள்ளது.

'குறுகிய காலத்தில் கூடிய வருமானம்' என்ற வாக்குறுதியை வழங்கும் 'செலான் Money Market சேமிப்புக் கணக்கு' வாடிக்கையாளர்கள் தமது குறுகியகால முதலீடுகளை தமது வசதிக்கேற்ப நிர்வகிப்பதற்கு இடமளிக்கிறது. தமது வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளை உணர்ந்து செலான் வங்கி மீண்டுமொருமுறை குறுகிய கால நிதியை நிர்வகிக்க முறையான கட்டமைப்புடைய நிதிக்கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. செலான் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுவதன் மூலம் அவர்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப நிதித் தீர்வுகளை வழங்குகின்றது.

ஆரம்ப வைப்பாக ரூ.500,000 மூலம் ஆரம்பிக்கப்படக்கூடிய செலான் Money Market சேமிப்புக் கணக்கின் வட்டி வீதங்கள் வாரந்தோறும் பரிசீலிக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணக்குக்கான தொடர்பு இன்டர்நெட் வங்கிச்சேவை மூலம் உடனடியாக வழங்கப்படும்.

இப்புதிய கணக்கு தொடர்பாக கருத்துத் தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியலுக்கான பிரதி பொது முகாமையாளர் டிலான் விஜயசேகர,'குறுகிய கால முதலீடுகள் மூலம் கூடிய வருமானத்தைப் பெற முயற்சிக்கும் பாரிய கூட்டமைப்புக்கள் மற்றும் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்க்கும் முகமாகவே செலான் Money Market சேமிப்புக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறுகிய கால மீள்கொள்வனவு பத்திரங்கள் மற்றும் கடன் முறிகள் ஆகியவற்றில் தமது முதலீட்டு நிதிகளை பலர் முதலிடுகின்றனர். அவர்களது தேவைகளை நிறைவேற்ற செலான் வங்கியின்; சாதாரண வட்டி வீதங்களை விட அதிக வருமானம் வழங்கும் செலான் Money Market போன்றதொரு சேமிப்புக் கணக்கு சாமர்த்தியமான முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கிய நிதிக்கருவியாகத் தொழிற்படும் என்பதில் ஐயமில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .