Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜூவலரியின் பூரண அனுசரணையுடன் DanceforTrail என்ற பெயரில் பரத நாட்டிய நிகழ்வொன்று அண்மையில் பம்பலபிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
கராபிட்டிய புற்று நோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் பொருட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியானது, வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜூவலரியின் ஸ்தாபகரும் தனது பெரிய தந்தையுமான எம் பாலசுப்ரமணியம் அவர்களை நினைவு கூறுமுகமாக தக்ஷாயினி ஜெயராஜாவினால் அரங்கேற்றப்பட்டது.
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜூவலரியின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் ஏ.பி ஜெயராஜாவின் மகளான தக்ஷாயினி, ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷனின் வழிகாட்டலின் கீழ் தனது 5ஆவது வயதிலிருந்து நடனம் பயின்றவர். அவர் தனது அனுபவத்தை பயன்படுத்தி Dancefortrail நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தார். இந்த வண்ணமயமான மாலைப்பொழுதை சிறப்பிக்கும் வகையில் அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டார்கள். வருகை தந்திருந்த விருந்தினர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நன்கொடைகள் Trail/Colours of Courage Trust நிதியத்துக்கு வழங்கப்பட்டது.
நாதன் சிவகனநாதன் மற்றும் சரிந்த உனம்புவே ஆகியோரின் முயற்சியில் 2011ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வுசயடை நடைபவணி, புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டதொரு சமூகப் பணியாகும்.
தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையான 670 கிலோ மீற்றர் தூர Trail நடைபவனியில் பெருமளவிலானோர் கலந்துகொண்டு சுமார் 2.6 மில்லியன் அமெரிக்க டொலரை திரட்டுவதற்கு உதவினர். இந் நிதியின் மூலம் தெல்லிப்பளை Trail புற்றுநோய் மருத்துவமனை 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிர்மாணிக்கப்பட்டது.
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜூவலரி, கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகத்துடன் இணைந்து 2011ஆம் ஆண்டில் Trail நடைபவனிக்கு 100,000 அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியதோடு, இவ்வருடம் மீண்டும் Trail உடன் 2ஆவது தடவையாகப் பங்கேற்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago