2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

‘பண வைப்பு மற்றும் மீளப் பெறல்’ இயந்திரங்கள் அறிமுகம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழமையான ATM மற்றும் பண வைப்பு இயந்திரங்களின் பயன்பாட்டுக்கு மேலதிகமாக சிறப்பியல்புகளைக் கொண்ட முன்னேற்றகரமான புதிய தலைமுறை நிதிக்கொடுக்கல் வாங்கல் இயந்திரங்களை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.   

‘பணவைப்பு மற்றும் மீளப் பெறல் இயந்திரங்கள்’ படிப்படியாக தனது 251 கிளைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.  

அட்டைகள் அற்ற பண வைப்பு இந்த இயந்திரங்கள் இதில் உள்ளடங்குவதோடு, புதிய பண வைப்பு இயந்திரம் மூலம் மூன்றாம் நபர் கணக்கிற்கான பண வைப்பும் சாத்தியமாகும். பாவனைப் பட்டியல் கட்டணங்களைச் செலுத்தல், கொமர்ஷல் வங்கி கடனட்டை கொடுப்பனவுகளைச் செலுத்தல் என்பனவற்றையும் இதனூடாகச் செய்யலாம் என்று வங்கி அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 200 நோட்டுக்களை எண்ணக் கூடிய அதி நவீன வசதி இந்த இயந்திரத்தில் காணப்படுவதால் இனி கடித உறைகளின் தேவையும் அவசியம் அற்றதாகின்றது. இதன் மூலம் சுற்றாடலுக்கு சிநேகமானதாகவும் இந்த இயந்திரம் அமைந்துள்ளது.  

மேலதிகமாக இந்தப் புதிய இயந்திரங்கள் மீதிகளை சரிபார்த்தல், தொடர்புபட்ட கணக்குகளுக்கு இடையில் நிதிகளை மாற்றுதல், தனிப்பட்ட அடையாள இலக்கங்களை (PIN) மாற்றல் ஆகிய சேவைகளையும் வழங்கக் கூடியவை. ஓவ்வொரு செயற்பாட்டுக்குமான விரிவான பற்றுச் சீட்டுக்களும் விநியோகிக்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X