2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

24மணி நேரமும் இயங்கும் ரோஸ்வுட் வைத்தியசாலை

Gavitha   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோஸ்வுட் வைத்தியசாலை 24 மணித்தியாலயங்களும் செயற்படும் நிபுணத்துவம் வாய்ந்த பற்சிகிச்சை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வெளி நோயாளர்களுக்கான சிகிச்சைகளையும் அதேபோல் பல் வைத்திய சிகிச்சைகளையும் 24 மணித்தியாலங்களும் பெற்றுக்கொள்ளக்கூடிய இலங்கையின் ஒரே வைத்தியசாலையாக ரோஸ்வுட் வைத்தியசாலை விளக்கின்றது.

சகல தகுதிகளையும் பெற்ற ஊழியர்களைக்கொண்ட பிரதேசத்தின் ஒரே மருந்தக சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மேலதிகமாக அவசர வைத்திய சிகிச்சைப் பிரிவு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களைக்கொண்டு வழங்கப்படும் வைத்திய பரிசோதனைகள் உட்பட வைத்திய நிபுணர் சேவைகள் மற்றும் ஆய்வு கூட சேவைகளையும் ரோஸ்வுட் வைத்தியசாலையில் எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவைகளை வழங்குவதற்காக தகுதிபெற்ற வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உட்பட ஊழியர்களை இவ் வைத்தியசாலை கொண்டுள்ளது.

நோயாளர்களின் மனதுக்கு ஓய்வு கிடைக்கும் வகையில் இயற்கை சுற்றாடலுக்கு முக்கியத்துவமளித்து ரோஸ்வுட் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெற்றோருடன் வரும் சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கு தேவையான வசதிகளும் வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X