Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 01 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
Cool Planet, தனது 10 வருட பூர்த்தியை அண்மையில் தமது ஊழியர்கள் மற்றும் அதிதிகளுடன் கொண்டாடியது. சுமார் 17 ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் குறுகிய காலத்துக்குள் மிக பிரமாண்டமான நிலையில் 600 ஊழியர்கள் மற்றும் 7 கிளைகளுடன் வியாபித்துள்ளது.
அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், “எமது வெற்றிக்கு பிரதான காரணம் முழு முயற்சியுடன் பணிபுரியும் எமது ஊழியர்களும், எம்மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கும் எமது வாடிக்கையாளர்களுமேயாகும். நாம் இதனை எமக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு உபகாரமளிப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தவிருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.
தமது வளர்ச்சியின் முக்கியப் பங்குதாரர்களான ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை வழங்கித் தொடர்ச்சியாக அவர்களது சேவையைப் பாராட்டி கௌரவ விருதுகள் வழங்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். முகாமைப் பணிப்பாளரின் கருத்துக்கமைய, ஆரம்பத்தில் Cool Planet உடன் பயணத்தை ஆரம்பித்த 17 ஊழியர்களுள் 10 ஊழியர்கள் இன்னும் தம்முடன் சேவையாற்றுவதாக கூறினார். அதுமட்டுமன்றி அவர்களின் முதலாவது வாடிக்கையாளரை நேரடியாக சந்தித்து தொடர்ச்சியாக அவர் Cool Plane உடன் இணைந்திருக்கின்றமைக்காக உபகாரங்களைப் புரிந்தமையும் விசேட அம்சமாகும்.
ஆரம்பம் முதல் தமது வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்திலான உற்பத்திகளை நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதை Cool Planet உறுதிசெய்து வருகின்றது. 100% உத்தரவாத்தை உறுதி செய்யுமுகமாக அதன் முகாமைப் பணிப்பாளர் ஆடைத் தெரிவு, தர நிர்ணயம் மற்றும் கொள்வனவில் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கின்றமை விசேட அம்சமாகும். இதன் காரணமாக தொடர்ச்சியாகத் தன்னிகரற்ற தமக்கே உரிய வடிவங்களில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது தெரிவுகளைப் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கின்றது.
“நாம் ஒரு நிறுவனம் என்ற வகையில் ஆடைகளை மட்டும் விற்பனை செய்யும் நிறுவனமாக எமது பயணத்தை ஆரம்பித்தோம், படிப்படியாக இப்போது ஆடைகளை மட்டுமன்றி வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் ஒரே கூரையின் பெற்றுக்கொள்ளத்தக்க ஒரு இடமாக எமது வளாகத்தை நாம் வடிவமைத்திருக்கின்றோம். இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு அவர்களது விருப்புக்கேற்றவாறு இலகுவாக கொள்வனவு செய்யத்தக்க சூழல் அவர்களுக்கு கிடைத்துள்ளது” என முகாமைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த 10 வருட பயணத்தில், Cool Planet நிறுவனம் மட்டுமன்றி அவர்களது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குனர்களும் பெருமளவில் வெற்றிப் பாதையில் பயணத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
6 minute ago
26 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
30 minute ago
1 hours ago