Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அமைப்பானது, நல்லிணக்கத்துக்கான இளைஞர் அமைப்பாகும். இந்த இயக்கம், இலங்கை முழுவதும் அனைத்து பிரதேசங்களையும் சமூகங்களையும் சேர்ந்த இளைஞர்களை உள்ளடக்கியுள்ளதுடன் அண்மையில் 10ஆவது வருட நிறைவு வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப நுகவெசன அரங்கில், அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் இடம்பெற்றது.
“ஒன்று கூடுவோம்” அமைப்பு, 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 20,000 அங்கத்தவர்களையும், தன்னார்வ அடிப்படையில் 800 க்கும் மேற்பட்ட தொண்டர்களையும் கொண்டுள்ளது.
இந்த அமைப்பானது, கொழும்பு, மாத்தறை, முல்லைத்தீவு, கல்முனை, மொனராகலை ஆகிய பிரதேசங்களில், நல்லிணக்க மையங்களைக் கொண்டுள்ளதுடன், வெகுவிரைவில் நுவரெலியா பிரதேசத்தில் நல்லிணக்க மையமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
தொழில் முயற்சி, நல்லிணக்கம், மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்த்தல் போன்ற செயற்பாடுகளில், இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு, இயங்கி வரும் இந்நிறுவனமானது, வருடாந்தம் “எதிர்கால தலைவர்களின் மாநாட்டை” முனைப்புடன் நடாத்தி வருவதுடன், இம்மாநாட்டின் ஊடாக மாணவத் தலைவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த தலைவர்களை உருவாக்குதல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வருகிறது.
“ஒன்றுகூடுவோம்” இலங்கை அமைப்பு, உலகளாவிய ரீதியில் புலம்பெயர் அத்தியாயங்களை ஆரம்பித்துள்ளதுடன் மெல்பேன், லண்டன், லோஸ்ஏஞ்சல்ஸ், டொரண்டோ மற்றும் வாஷிங்டன் டிசி ஆகிய நகரங்களில், இதுசார்ந்த நிகழ்வுகளை நடாத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago