2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உலக டவுன் குறைபாடு தின கொண்டாட்டங்கள் – 2014

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பங்குனி 21ஆம் திகதியை உலகளாவிய ரீதியில் டவுன் குறைபாடு (Down syndrome) தினமாக கொண்டாடுவதால் இது மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. உலக டவுன் குறைபாடு (Down syndrome) தினம் (WDSD) கொண்டாடப்படுவதன் நோக்கம் என்னவெனில் குறைபாடு பற்றிய விழிப்புணர்வையும் அது பற்றிய விளக்கம், குறைபாடு தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் டெளன் குறைபாட்டுடன் வாழுவோர் நல்வாழ்வை முன்னெடுப்பதற்கு ஆதரவு, மற்றும் அங்கிகாரம் அளிப்பதற்குமாகும். கடந்த காலத்தில் டெளன் குறைபாட்டு நபர்களின் திறன்கள், திறமைகள் மற்றும் அவர்களின் சாதனைகளை வெளிக்கொணர்வதில் WDSD பெரும் பங்காற்றியது.
 
இவ்வருடம் பங்குனி 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை றோட்டரக் மாவட்டம் 3220, றோயல் கல்லூரியின் இன்டரக்ட் கழகமும் (Interact Club) இலங்கையின் தரமான கார் கழகமும் (Ceylon Classic Car Club) இணைந்து கோசல டுளவ (Kosala Dullewa Foundation) அறக்கட்டளையுடன் உலக டவுன் குறைபாடு (Down syndrome)  தினத்தை கொண்டாடுகின்றனர். இதன் போது 4 திட்டங்களை முன்னெடுக்கிறோம். அவையாவன விழிப்புணர்வு வாகன அணி வகுப்பு, மருத்துவ முகாம், பலவகை நிகழ்ச்சி மற்றும் சித்திர கண்காட்சி என்பனவாகும். 
 
“என் உலக நிறங்கள்” எனும் சித்திர கண்காட்சி மற்றும் போட்டி நாளின் ஒரு புதிரான நிகழ்வாகும். கடந்த ஆண்டு சிறப்பு தேவைகளோடுள்ள குழந்தைகள் வரைந்த 630 சித்திரங்கள் அவர்களின் அற்புத திறமைகள் மற்றும் கருத்துக்களை சித்தரித்து காட்டியதால் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தன. றோயல் கல்லூரியின் நவரங்ககல (Nawarangahala) நுழைவாயில் முற்றிலும் மாறுபட்ட வண்ணமயமான மகிழ்ச்சியான நாளாக இருந்தது. சிறுவர்கள் வரைந்த சித்திரங்கள், அவர்கள் உலகை பார்க்கும் விதம் இயற்கை மற்றும் நாளாந்த நடவடிக்கைகளை எடுத்துக்காட்டியன. இது பார்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும் ஓர் அற்புதமான அனுபவமாகவும் இருந்தது. வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. அனைத்து வரைபடங்களும் நாம் வாழும் ஒரு உலகத்தை 630 வெவ்வேறு கருத்துக்களால் வெளிக்கொணர்வாதாக அமைந்தன. உண்மையாக வியப்புக்குரியது. 
 
பங்கேற்பாளர்கள் அவர்களின் வரைபடங்களை கண்காட்சியில் பார்த்து அதனை தமது பெற்றோருக்கு சுட்டி காட்டியதை பார்த்த போது அவர்களிற்கு மட்டுமல்லாது சுற்றி இருந்தவர்களுக்கும் மகிழ்சியை ஏற்படுத்தியது. சித்திர போட்டி மற்றும் கண்காட்சி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அவர்களின் திறன்களை வெளிக்காட்ட பெரிய மேடையை அமைத்து கொடுக்கிறது. உலக டவுன் குறைபாடு (Down syndrome) தின (WDSD) கொண்டாட்டங்கள் அவர்களின் திறன்களை வெளிக்காட்ட சந்தர்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாது ஏனைய சிறுவர்களை போன்று எவ்வித தடைகளுமின்றி உலகில் வாழ முடியும் எனும் செய்தியையும் வழங்குகின்றது. 
 
“என் உலக நிறங்கள் - 2014” சித்திர போட்டி மற்றும் கண்காட்சி இவ்வாண்டும் உலக டவுன் குறைபாடு (Down syndrome)  தின (WDSD) கொண்டாட்டங்களில் எதிர்பார்ப்புக்குரிய நிகழ்ச்சியாகும். எனவே தான் உங்கள் நிறுவனம்/பாடசாலையை சேர்ந்த சிறுவர்கள் இதில் பங்குபற்ற விரும்பினால் அல்லது தனிப்பட்டவர் இப்போட்டி மற்றும் கண்காட்சியில் பங்குபற்ற விரும்பின் இச்சந்தர்பத்தை நழுவ விட வேண்டாம். பங்கேற்பாளர்களின் வயதினை 5 பிரிவுகளாக பிரித்து 50 வெற்றியாளருக்கும் மற்றும் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் 23ஆம் திகதி பங்குனி மாதம் 2014ஆம் ஆண்டு நடைபெறும் பரிசளிப்பு விழாவின் போது சான்றிதழ்கள் வழங்கப்படும். உங்கள் சித்திரங்களை 2014ம் ஆண்டு தை மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இல. 06 வளகம்பா மாவத்தை (Walagmaba Mawatha), பொறுபான வீதி (Borupana Road), இரத்மலானை (Ratmalana). 
 
சித்திர போட்டிக்கான விண்ணப்ப படிவம் - என் உலக நிறங்கள் 
 
1. முழு பெயர்
2. பெயர் ஆங்கில  தலைப்பெழுத்துக்களுடன் (சான்றிதழில் எழுதுவதற்காக)
3. வயது மற்றும் பிறந்த திகதி
4. முகவரி 
5. தொலைபேசி இலக்கம்
6. இயலாமையின் தன்மை
7. பாடசாலை/நிறுவனத்தின் முகவரி
8. பாடசாலை/நிறுவன தலைவரின் கையொப்பம்
 
மேலதிக தகவல்களை பெற தயவு செய்து கோசல டுளவ (Kosala Dullewa Foundation) தொ.பே 0112626526 அல்லது ரோமல் டி சில்வா 0775299864 தொடர்புகொள்ளவும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .