2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘இலங்கையில் முதலீடு செய்யுங்கள்’; சிங்கப்பூர் செயலமர்வுக்கு 180க்கும் மேற்பட்டோர் பதிவு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 13 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014 ஜனவரி 21ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள ”இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்” எனும் செயலமர்வுக்கு இதுவரையில் 180க்கும் மேற்பட்டவர்கள் தம்மை பதிவு செய்துள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தம்மை பதிவு செய்து கொள்வதற்கான இறுதி திகதி ஜனவரி 13ஆம் திகதியாகும். சிங்கப்பூரின் ரிட்ஸ் கார்ல்டன், மில்லேனியா சிங்கப்பூர் பகுதியில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இந்த செயலமர்வு கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிங்கப்பூரின் முதலீட்டாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .