2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறந்த கூட்டாண்மை குடிமகன் விருது DIMO வசம்

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்த கூட்டாண்மை குடிமகன் விருது 2013 இல், முதலாமிடத்தை டீசல் மோட்டர்ஸ் என்ஜினியரிங் தன்வசப்படுத்தியிருந்தது.

முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை சம்பத் வங்கி மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியன தம்வசப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்த விருதுகளில் ஏ பிரிவில் முதல் மூன்று இடங்களை டீசல் மோட்டர்ஸ் என்ஜினியரிங், சம்பத் வங்கி, எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியன பெற்றிருந்ததுடன், பீ பிரிவில் முதல் மூன்று இடங்களை ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் கொகா கோலா ஆகியன தம்வசப்படுத்தியிருந்தன.

முதல் 10 இடங்களில் அக்சஸ் என்ஜினியரிங், எயிட்கன் ஸ்பென்ஸ், பிரான்டிக்ஸ் லங்கா, சிலோன் டொபாக்கோ கம்பனி, கொமர்ஷல் வங்கி, டீசல் மோட்டர்ஸ் என்ஜினியரிங், தேசிய அபிவிருத்தி வங்கி, சம்பத் வங்கி, சிங்கர் ஸ்ரீலங்கா, ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி ஆகியன தம்வசப்படுத்தியிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .