.jpg)
புகழ்பெற்ற LMD இதழ் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இலங்கையின் மிகச்சிறந்த உயர் கல்வியகமாக தரப்படுத்தப்பட்ட SLIIT கல்வியகமானது 2013/2014 ஆம் ஆண்டிற்கான பட்டப்படிப்பு கற்கைகளுக்கான புதிய மாணவர்களை இணைத்து கொள்கின்றது. பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக அமைப்பின் அங்கீகாரத்தை பெற்ற இலங்கையின் தனியார் உயர்கல்வி நிலையமாக SLIIT விளங்குகிறது.
SLIIT இன் பட்டதாரி கற்கைகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும் அவுஸ்திரேலியா, UK மற்றும் கனடா போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டதாரி கற்கைகளையும் வழங்கி வருகின்றது. 24 பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்பட்டு வரும் SLIIT மாணவர்களுக்கு பல்வேறு கல்வி வாய்ப்புக்களை வழங்குவதுடன், 2 வருட கற்கை நெறியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தமது பங்காளர் பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்கையை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
மாணவர்களுக்கு பல்வேறு கற்கை தெரிவுகளை வழங்கும் நோக்கில் SLIIT, அண்மையில் UK Loughborough பல்கலைக்கழகம், UK Teesside பல்கலைக்கழகம், UK Huddersfield பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளது.
Loughborough பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை இரு கல்வியகத்தின் சார்பாகவும் துணை அதிபர்(கற்பித்தல்) பேராசிரியர்.மொராஜ் பெல் மற்றும் SLIIT பிரதம நிறைவேற்று அதிகாரியான பேராசிரியர் லலித் கமகே ஆகியோர் பரிமாற்றிக்கொண்டனர். இதனூடாக எமது கல்வியகத்தில் சராசரியாக 60% உடன் ஒரு வருட கற்கையை பூர்த்தி செய்யும் மாணவர்கள் Loughborough பல்கலைக்கழகத்திற்கு சென்று Artificial Intelligence கற்கையுடன் கணினி அறிவியல் அல்லது கணினி அறிவியல் BSc. கற்கையை பூர்த்தி செய்ய முடியும். முதல் ஆண்டில் 20% கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும். SLIIT கல்வியகத்தின் முதல் ஆண்டு டிப்ளோமாவில் 70% பெறும் மாணவர்கள் 70% கட்டணத்திற்கு தகுதி பெறுவர்.
Teesside பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவின் உதவி முதல்வர் டாக்டர் Gary Griffiths மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். வட இங்கிலாந்தின் Middleborough இல் அமைந்துள்ள இப் பல்கலைக்கழகமானது ஐக்கிய இராச்சியத்தின் மிகச்சிறந்த 4 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது (இத்தரப்படுத்தல்கள் சர்வதேச மாணவர் பரோமீற்றர் எனும் ஆய்வுக்கமைவாக பெறப்பட்டது). இப் பல்கலைக்கழகம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி BSc கற்கையை வழங்குகிறது. UK இல் தமது இறுதி ஆண்டு கற்கையை தொடரும் அனைத்து SLIIT மாணவர்களுக்கும் 1500 பவுண் புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.
'கணினி மற்றும் பொறியியல் கற்கைகளை வழங்கும் நோக்கில் அண்மையில் நாம் UK Huddersfield பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளோம். உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு பல்வேறு கல்வி வாய்ப்புக்களை வழங்குவதே எமது குறிக்கோளாகும்' என SLIIT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார்.
மேலும் SLIIT ஆனது அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. வணிக முகாமைத்துவ டிப்ளோமாவின் 2 வருட கற்கையை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு La Trobe பல்கலைக்கழகத்திற்கு சென்று தமது இறுதியாண்டு கற்கையை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப் பல்கலைக்கழகத்தில் 2 வருட வணிக முகாமைத்துவ டிப்ளோமா கற்கை பூர்த்தி செய்து முதுகலை கற்கையை தொடரும் மாணவர்களுக்கு 10% விசேட கட்டணக்கழிவு வழங்கப்படவுள்ளது.
இக் கல்வியகம் கல்வி, புதுமை மற்றும் நவீன கற்பித்தல் முறைகளில் உயர்தரத்தை பேணிவருகின்றது. SLIIT ஆனது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது' என SLIIT இன் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன தெரிவித்தார்.
SLIIT கல்வியகத்தின் பங்காளர் பல்கலைக்கழகங்கள்: ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம், Nottingham பல்கலைக்கழகம், ரொபர்ட் கோர்டன் பல்கலைக்கழகம், Teesside பல்கலைக்கழகம், Huddersfield பல்கலைக்கழகம், Loughborough பல்கலைக்கழகம், கர்டன் பல்கலைக்கழகம், William Angliss Institute, Surrey பல்கலைக்கழகம், RMIT, குயின்ஸ்லான்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், Deakin பல்கலைக்கழகம், Newcastle பல்கலைக்கழகம், Swinburne பல்கலைக்கழகம், Tasmania பல்கலைக்கழகம், University of South Australia, La Trobe பல்கலைக்கழகம், Algoma பல்கலைக்கழகம், மெமோரியல் பல்கலைக்கழகம், Wollongong பல்கலைக்கழகம், Southeast Missouri State பல்கலைக்கழகம், சின்சினாட்டி பல்கலைக்கழகம், Stratford பல்கலைக்கழகம் மற்றும் Illinois State பல்கலைக்கழகம் ஆகியவையாகும்.
மேற்குறிப்பிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்பட்டு வரும் SLIIT கல்வியகம் அண்மையில் தமது மாலபே கம்பஸில் பங்காளர் பல்கலைக்கழக தினத்தை கொண்டாடியது. ஒவ்வொரு மாணவரதும் திறமையை வெளிக்கொண்டு வரும் இக் கல்வியகத்தின் கற்கைநெறிகள், வெளிநாட்டு பல்கலைக்கழக இணைப்புகள் மற்றும் வசதிகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இத்தினத்தை ஏற்பாடு செய்திருந்தது.
மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் www.sliit.lk இன் ஊடாக அல்லது SLIIT மெட்ரோபொலிடன் கம்பஸ், BOC Merchant tower, #28, புனித. மைக்கேல் வீதி, கொழும்பு 03 அல்லது மாலபே கம்பஸ், புதிய கண்டி வீதி, மாலபே எனும் முகவரிக்கு வருகை தரவும்.
.jpg)