
இலங்கையின் முன்னணி பன்முகத்துறை வர்த்தக நிறுவனமான எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி, எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) மற்றும் பயோ எக்ஸ்ட்ரக்ட்ஸ் ஆகியவற்றுக்கு 2013ஆம் ஆண்டின் தேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன. இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த தேசிய வர்த்தக சிறப்புகள் விருதுகள் வழங்கலில், எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி பன்முக குழும பிரிவில் தங்க விருதையும், உலகளாவிய பரவல் பிரிவில் வெள்ளி விருதையும் தனதாக்கியிருந்தது. எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) கப்பல் போக்குரவத்து மற்றும் அது சார்ந்த சேவைகளுக்காக வெள்ளி விருதையும் தனதாக்கியிருந்தது. பயோ எக்ஸ்ட்ரக்ட்ஸ் உற்பத்தி-இதர பிரிவில் மெரிட் விருதையும் தனதாக்கியிருந்தது.
இந்த விருதுகளை பெற்றுக் கொண்டமை தொடர்பாக எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல், கூட்டாண்மை தொடர்பாடல்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி பெடி வீரசேகர கருத்து தெரிவிக்கையில், 'இந்த பெருமைக்குரிய விருதுகளை பெற்றுக் கொண்டமையையிட்டு நாம் பெருமைப்படுவதுடன், மகிழ்ச்சியடைகிறோம். சிறப்புத்தேர்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பன்முகச் செயற்பாட்டில் எமது உறுதித்தன்மை ஆகியவற்றுக்காக நாம் காண்பிக்கும் பேரரார்வத்துக்கு சான்றுபகர்வதாக அமைந்துள்ளது. எமது செயற்பாடுகளின் சிறப்புத்தேர்ச்சிக்காக கிடைத்த தன்னிகரற்ற கௌரவிப்பாக நாம் இதை கருதுகிறோம்' என்றார்.
இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் மூலம் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாக இந்த தேசிய வர்த்தகச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பை வழங்குவதுடன், தமது வர்த்தகத்துறையிலும் சிறப்பான பெறுபேறுகளை பதிவு செய்திருந்த நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய வர்த்தகச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஒவ்வொரு வருடமும் தமது துறைகளில் சிறப்பான வர்த்தக பெறுபேறுகளை பதிவு செய்த நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது.
எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜகத் பத்திரன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் சரக்கு போக்குவரத்து மற்றும் கையாள்கை துறையில் பல தசாப்த காலமாக முன்னணியில் எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) திகழ்கிறது. நிறுவனத்தின் வர்த்தகச் சிறப்புகளுக்காக நாம் கௌரவிக்கப்பட்டுள்ளோம். இந்த விருதை நாம் எமது 1200 க்கும் அதிகமான ஊழியர்களுக்கும் எமது நம்பிக்கை வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்' என்றார்.
இந்த விருதுகளுக்காக கிடைத்திருந்த விண்ணப்பங்கள் 8-புள்ளி வழங்கல் அடிப்படையில் மதிப்பிடப்பட்டிருந்தது. மூன்று பிரிவுகளாக இடம்பெற்ற இந்த மதிப்பிடும் செயற்பாடுகளில் மேசை மீளாய்வு, நேர்காணல்கள் மற்றும் மத்தியஸ்தர்களின் இறுதி மீளாய்வு போன்றன உள்ளடங்கியிருந்தன. இந்த மதிப்பீட்டு பிரிவுகளில் வர்த்தக மற்றும் நிதிசார் செயற்பாடுகள், உலகளாவிய பரந்த செயற்பாடு, அறிவு ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப முதலீடு, திறன் கட்டியெழுப்பல், செயற்திறன் நிர்வாகம், கூட்டாண்மை மேற்பார்வை மற்றும் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு ஆகியன உள்ளடங்கியிருந்தன. மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்த மத்தியஸ்தர்கள் தமது இறுதி தெரிவை மிகவும் கவனமான முறையில் தமக்கு கிடைத்திருந்த விண்ணப்பங்கள், மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றின் மூலம் மேற்கொண்டிருந்தனர்.
பயோ எக்ஸ்ட்ரக்ட்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிசா பஹர்தீன் கருத்து தெரிவிக்கையில், 'இந்த விருதானது, எமது கண்டுபிடிப்புகளுக்கும், சிறந்த கொள்கை அடிப்படையிலான வர்த்தகத்துக்கும் கிடைத்த கௌரவிப்பாக அமைந்துள்ளது. பாரம்பரிய மூலிகை மருத்துவ முறையை நாம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மூலிகை தயாரிப்புகளை நாம் தயாரித்து வருகிறோம். எமது வர்த்தக சிறப்புகளை தேசிய வர்த்தக சம்மேளனம் கௌரவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) ஆகியன 2013 ஆம் ஆண்டில் பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை தம்வசப்படுத்தியிருந்தன. இவற்றில் SLIM வர்த்தகச் சிறப்புகள் விருதுகள், ஆர்க் விருதுகள், Nஊநு விருதுகள் மற்றும் LACP விருதுகள் போன்றவற்றை குறிப்பிடமுடியும்.