2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஆய்வு விருது 2013

A.P.Mathan   / 2014 ஜூன் 11 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதல்தர மூலிகை அழகுசாதன வியாபார நாமமான 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்' பொருட்களை உற்பத்தி செய்கின்ற நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம;, இலங்கையர்களாலும் சாதிக்க முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் தேசிய கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு அனுசரணைகளை வழங்குகின்ற ஒரு தேசிய நிறுவனமாகும். தேசிய ரீதியில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதே 'நேச்சர்ஸ் சீக்கரட்ஸி'ன் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

மூலிகை ஆய்வு நிலையத்தை தன்னகத்தே கொண்டுள்ள 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்' நிறுவனம், அதற்கப்பால், உள்ளூர் விஞ்ஞானிகளை நாட்டிற்கு மிகவும் பயனளிக்கும் வகையிலான ஆய்வுகளில் (Applied Research) ஈடுபடுத்தும் நோக்கில் வர்த்தகத்துறையில் சிறந்த, வியாபார  ரீதியாக தேசிய தொழில்முயற்சியாளர்களால் சந்தைக்கு விநியோகிக்கக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் வகையிலான ஆய்வுகளை நிறைவுசெய்த பல்கலைக்கழக ஆய்வுக் குழுக்களுக்கு 250,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பரிசு மற்றும் 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஆய்வு விருது' (Nature's Secrets Research Award - for the best Commercially Viable Research) ஆகியவற்றை வருடாந்தம் வழங்குவதென 2010 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சமந்த குமாரசிங்க பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானபீட பட்டதாரியாகையால் இந்த விருதினை அந்த விஞ்ஞான பீடத்தில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்காக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டுக்கான 'நேர்ச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஆய்வு விருது'  இம்முறை நீரில் நனையாத, அழுக்குகள் தங்காத, புத்தி சாதுர்யமான கையுறை' உற்பத்தி தொடர்பில், உலகில் முதல்தடவையாக நடாத்தப்பட்ட ஆய்விற்காக இவ்விருது வழங்கப்பட்டது. இந்த ஆய்வானது பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் நெனோ தொழில்நுட்பப் பிரிவின் பேராசிரியர் காமினி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. நேர்ச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஆய்வு விருது'  வழங்கும் நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன உட்பட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சமந்த குமாரசிங்க மற்றும் அந்நிறுவன அதிகாரிகள் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர். 

2012 ஆம் ஆண்டு இந்த விருதானது பலுதூக்கல் விளையாட்டின்போது இடம்பெறும் தவறுகளை அடையாளம் காணக்கூடிய, குறைந்த செலவில் தயாரிக்கக்கூடிய நவீன தொழிநுட்ப வழிமுறையொன்றை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு வழங்கப்பட்டது.

'நேர்ச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஆய்வு விருது' பெறுவதற்காக ஆய்வுக் குழுவொன்றை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளில்இ நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் எந்தவித தலையீடும் மேற்கொள்வதில்லை என்பதுடன்இ பல்கலைக்கழக நிர்வாகக் குழுவினால் பின்பற்றப்படும் வழிமுறைகளின் பிரகாரமே தெரிவு மேற்கொள்ளப்படுகின்றது.
 
•    பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தரால் ஆய்வை மேற்கொள்ளும் குழு நியமிக்கப்படுவதுடன் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, பட்டப்பின்படிப்பு கல்வி நிறுவனப் பணிப்பாளர் மற்றும் மேலும் சில உறுப்பினர்கள் அந்த குழுவில் உள்ளடக்கப்படுவர்.
•    அந்த ஆய்வுக் குழுவிற்கு பேராசிரியர் / கலாநிதி ஒருவர் அல்லது இருவர் மற்றும் பட்டப்பின் படிப்பு பிரதிநிதி ஒருவர் அல்லது இன்னும் சிலர் தெரிவுசெய்யப்படவேண்டும்.
•    விருது வழங்குவதற்குரிய வருடத்திற்குள் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆய்வுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
•    ஆய்வு நடவடிக்கைகள் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் அந்த ஆய்வின் மூலமான கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை இலங்கையின் தொழில்முயற்சியாளர் ஒருவருக்கு வழங்குவது கட்டாயமாகும்.
•    இந்த விருதுக்குரிய ரொக்கப் பரிசு தொகையான 250,000 ரூபா பல்கலைக்கழகத்தின் ஊடாக நேரடியாகவே ஆய்வுக் குழுவிற்கு பெற்றுக்கொடுக்கப்படும்.
•    சம்பந்தப்பட்ட வருடத்திற்குள் விருதினை வழங்குவதற்கு என உரிய தகுதியைக் கொண்டுள்ள ஆய்வு மேற்கொள்ளப்படாத பட்சத்தில்இ ரொக்கப் பரிசை அதற்கடுத்த வருடத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு கவனம் செலுத்தப்படும். இதன் பிரகாரம் அடுத்த வருடத்தில் இரண்டு ஆய்வுகளுக்குரிய விருதினை வழங்குவதற்கான இயலுமை காணப்படும்.

ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட GMP, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ISO 9001 மற்றும் ISO 14001 ஆகிய தரச்சான்றிதழ்களின் கீழ் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒரே நம்நாட்டு அழகுசாதன வர்த்தக நாமம் 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்' ஆகும். அதிசிறந்த நவீன தொழிநுட்ப வசதியுடைய தொழிற்சாலையில், தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த மூலிகைத் தாவரங்களின் குணநலன்களை நவீன அழகுசாதன தொழிநுட்பத்துடன் கலந்து, சர்வதேச தரத்திலான அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொழிற்சாலை வளாகத்தை சூழ மூலிகைத் தாவரங்கள் மற்றும் செடிகள் அடங்கிய பூங்காவொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு 500 க்கும் அதிகமான பல்வேறு அரிய வகையான மூலிகைத் தாவரங்கள் வளர்க்கப்பட்பட்டு வருகின்றன. மூலிகைத் தாவரங்கள் மற்றும் அவற்றின் அபிவிருத்தி குறித்த ஆய்வினை ஊக்குவிப்பதற்காக மூலிகை ஆய்வு நிலையமொன்றை ஆரம்பித்துள்ள முதலாவது தனியார் நிறுவனமாகவும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் திகழ்கின்றது. அரிதான மற்றும் பெறுமதியான மூலிகைத் தாவர வகைகளை வளர்த்து மக்களிடையே பகிர்ந்தளிப்பதுடன் எதிர்கால சந்ததியினருக்காக அவற்றை பாதுகாப்பதனையும் நோக்காகக்கொண்டு நவீன தாவர திசு வளர்ப்பு ஆய்வுகூடமொன்றும் (Tissue Culture Lab) 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்'  தொழிற்சாலை வளாகத்திற்குள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .