2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தனியார் துறையில் சிறந்த முதல் 25 நிறுவனங்களில் முதலிடத்தில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்

A.P.Mathan   / 2013 நவம்பர் 07 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிஸ்னஸ் டுடே சஞ்சிகையின் மூலம் மேற்கொள்ளப்படும் வருடாந்த தனியார் நிறுவனங்களின் தரப்படுத்தலின் போது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் 25 சிறந்த நிறுவனங்களின் தரப்படுத்தலுக்கு அமைவாக இந்த முதலிடத்தை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பெற்றிருந்தது.
 
முதல் 25 நிறுவனங்களின் தரப்படுத்தல் விபரம் வருமாறு, 
 
1. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், 2. கொமர்ஷல் வங்கி, 3. புக்கிட் தாரா, 4. சிலோன் டொபாக்கோ கம்பனி, 5. ஹற்றன் நஷனல் வங்கி, 6. டயலொக் ஆக்சியாடா, 7. சம்பத் வங்கி, 8. தேசிய அபிவிருத்தி வங்கி, 9. டிஸ்டிலரிஸ் கம்பனி ஒஃவ் ஸ்ரீலங்கா, 10. ஸ்ரீலங்கா ரெலிகொம், 11. எயிட்கன் ஸ்பென்ஸ், 12. ஹேலீஸ். 13. நெஸ்லே, 14. DFCC வங்கி, 15. சிரி ஹோல்டிங்ஸ், 16. சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, 17. எல்ஓஎல்சி, 18. பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், 19. லங்கா ஐஓசி, 20. வலிபெல் வன், 21. செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் லங்கா, 22. றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி, 23. செலிங்கோ இன்சூரன்ஸ், 24. செலான் வங்கி, 25. யுனைட்டட் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
 
இந்த நிறுவனங்களின் நிதிசார் பெறுபேறுகளை பொறுத்து அவை தரப்படுத்தப்பட்டிருந்ததாகவும், கொழும்பு பங்குச்சந்தையில் நிறுவனங்கள் பட்டியல்படுத்தியிருந்த தரவுகளைக் கொண்டு இந்த விபரங்கள் திரட்டப்பட்டிருந்ததாகவும் பிஸ்னஸ் டுடே அறிவித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .