2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பை மேம்படுத்த இலங்கைக்கு 83 மில்லியன் டொலர் கடனுதவி

A.P.Mathan   / 2014 மே 19 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உலக வங்கியின் மூலம் முன்னெடுக்கப்படும் நிதி வழங்கல் செயற்றிட்டத்துக்கு 83 மில்லியன் டொலர் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் பிரதான நீரோந்து பகுதிகளில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களில் அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்ள 32 நீர்நிலைகளை புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் நீர்நிலைகளில் பாரிய மற்றும் மத்திய அளவுகளைச் சேர்ந்த மொத்தம் 350 உள்ளடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பழமை வாய்ந்தனவாகவும், பல்வேறு விதமான சிதைவுகளையும் எதிர்நோக்கியுள்ளன.

இந்த நிதியுதவியின் மூலம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த 14 நீர்த்தேக்கங்களுடன், மேலும் 30 புதிய நீர்த்தேக்கங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X