2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையர்களுக்கு உள்ளக மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் Lotus World அமைப்பு

A.P.Mathan   / 2014 நவம்பர் 19 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச ரீதியில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த Lotus World அமைப்பின் மூலமாக உள்ளக மகிழ்ச்சியை ஏற்படுத்தி, மனித நேயத்தை ஊக்குவித்து, உலகை வாழ்வதற்கு உகந்த பகுதியாக மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
லைட் ஒஃவ் ஆசியா மையத்தின் தாபகரும், ஸ்ரீசித்தார்த்த கௌதம திரைப்படத்தின் இயக்குநருமான நவின் குணரட்ன மற்றும் இந்திய நட்சத்திர நடிகர் ககன் மலிக் ஆகியோர் இணைந்து இந்த அமைப்பை தாபித்திருந்தனர். இது குறித்து அறிவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிகழ்வில் லுஆங் ராஜதாரஸ்ரீ ஜயன்குர பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும் சில முன்னணி சமய பிரமுகர்களும் பங்குபற்றியிருந்தனர். அறிமுக உரையை மஹாத்மா காந்தி நிலையத்தின் தலைவர் கலாநிதி. மொஹமட் சலீம் வழங்கியிருந்தார்.
 
இந்த அமைப்பின் பிரதான நோக்கம் அரவணைப்பு மற்றும் பகிர்வு தொடர்பில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெறுமதிகளை பகிர்ந்து கொள்வது குறித்து கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் சிறந்த கொள்கைகள், நாணயமான கொள்கைகள் மற்றும் சிறந்த மனநிலைகள் போன்றவற்றை எமது எதிர்கால சந்ததியினருக்கு போதிக்கும் வகையில் இந்த அமைப்பு அமைந்துள்ளது.
 
அனைத்து இலங்கையர்களையும் அழைக்கும் இந்த Lotus World அமைப்பு, உள்ளக மகிழ்ச்சியை பெற்று பயன்பெறுமாறு தெரிவித்துள்ளது.
 
இந்த அமைப்பின் ஆரம்ப கட்ட செயற்பாடுகள் தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X