
மாதத்தின் முதல் பகுதியில் இலங்கையின் மில்லியன் சுற்றுலாப் பயணியை வரவேற்றிருந்த நிலையில், இலங்கையின் மிகப்பெரிய, வேகமாக வளர்ந்து வரும் மற்றும் அதிகளவு தொழில் வாய்ப்புகளை கொண்டுள்ள துறையாக விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை என்பது அமைந்துள்ளது. இலங்கையில் மட்டுமில்லாமல், உலகளாவிய ரீதியிலும் இந்த துறையில் பெருமளவானவர்கள் தொழில் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
2011 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த Raffles Instituteஐ துறையில் புகழ்பெற்ற பிரமுகரான Raffles கொன்சொலிடேடட் இன் தலைவர் டோனி பொஹொரன் தாபித்திருந்தார். இன்று இந்த கல்வியகம் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையில் வெவ்வேறு வகையான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அண்மையில் இந்த கல்வியகத்தின் மூலம், ஒமான் பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு மற்றும் பானசேவைகளில் குறுங்கால அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கப்பட்டிருந்தது.
நிபுணத்துவம் வாய்ந்த உணவு தயாரிப்பு மற்றும் உணவு மற்றும் பான வகை முகாமைத்துவ செயற்பாடுகளில் பட்டத்தை வழங்கும் வகையில் மற்றும் சிலோன் ஹோட்டல் பாடசாலையின் அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், மிச்சிகன் பல்கலைக்கழகத்துடன் கல்வி நிலையத்துடன் இணைந்த நிலையமாக அமைந்துள்ளது. பொதுவான பாடங்களுக்காக மாணவர்களை உட்சேர்ப்பதற்கு மேலாக விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான கல்விக்கு இலங்கையில் அதிகளவு கேள்வி காணப்படுகிறது. இது எமக்கு வியப்பூட்டுவதாக அமைந்திருப்பதில்லை.
'இந்த தொழிற்துறை பல்வேறு விசேட தெரிவுகளை கொண்டுள்ளது, ஹோட்டல் முகாமைத்துவம் முதல் உணவு தயாரிப்பு, விநியோகம் மற்றும் சமையல் கலை போன்றன இதில் உள்ளடங்கியுள்ளன. இந்த நிலைகள் வெவ்வேறு சூழலில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் றிசோர்ட்கள், உணவகங்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வழங்கும் வகையில் அமைந்துள்ளன'.
உலக பிரயாண மற்றும் சுற்றுலா சம்மேளத்தின் தரவுகளுக்கு அமைய, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை என்பது உலகளாவிய ரீதியில் காணப்படும் 260 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை தொழிலில் கொண்டுள்ளது. அத்துடன், இந்த துறையில் உள்நாட்டில் அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. முன்பிருந்ததை போலில்லாமல், தற்போது விருந்தோம்பல் துறையில் நிலைத்திருப்பதற்கு தகைமைகளை பெற்றிருக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
Raffles Institute மூலமாக Pastry & Bakery, International Cookery, Food & Beverage Service, and Hotel & Catering Management ஆகியவற்றில் தகைமைகளை வழங்கி வருகிறது. மேலும், கல்வியகத்தின் மூலமாக தெரிவு செய்து கொள்ளக்கூடிய, வடிவமைக்கப்பட்ட மற்றும் வினைத்திறன் வாய்ந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு பல இளம் நபர்கள் அதிகளவு ஈர்க்கப்படுகின்றனர். தமது துறையில் முறையான தகைமையை கொண்டிருப்பதற்கு இவர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய அரசம ற்றும் தனியார் பாடசாலைகளில் தமது கல்வியை பூர்த்தி செய்தவர்களும் இதில் அடங்கியுள்ளனர். இந்த வலையமைப்பின் மூலம் நாட்டின் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் றிசோர்ட்களுக்கு துறைசார் பயிற்சி வாய்ப்புகளையும் வழங்குகிறது.
City & Guilds இன்டர்நஷனல் மற்றும் கல்வி அமைச்சின் EKSP திட்டத்துடன் இணைந்து Raffles Institute வெளிநாட்டு மொழி வகுப்புகளை முன்னெடுக்கவும் முன்வந்துள்ளது. பணிப்பாளர் சபையை சேர்ந்தவர்களில் ஒஸ்கார் வணிகசேகர மற்றும் மொஹான் டி சில்வா ஆகியோர் விருந்தோம்பல் துறையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல ஆண்டுகளில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளனர்.