2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் 17ஆவது காப்புறுதி காங்கிரஸ் மாநாடு கொழும்பில் இன்று முதல் ஆரம்பம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவருத்தியடைந்து வரும் நாடுகளின் 17ஆவது காப்புறுதி காங்கிரஸ் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது. 17 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பங்குபற்றுநர்களுடன் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் ஒவ்வொரு பிராந்தியங்களில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த விடயங்களை பங்குபற்றுநர்கள் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
 
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. பல வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் இலங்கை காப்புறுதி சம்மேளனம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின் நோக்கம், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காப்புறுதித்துறையை உறுதியடையச் செய்வதாக அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .