2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேயிலை ஏல விற்பனையில் 20இற்கும் அதிகமான உயர்ந்த விலை கோரல்கள் பதிவு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேயிலை ஏல விற்பனை வரலாற்றில் இதுவரையில் பதிவாகியிருந்த 20 வெவ்வேறான உயர்ந்த பெறுமதிகள் இந்த வார ஏல விற்பனையின் போது பதிவாகயிருந்தன. 
 
கொள்வனவாளர்கள் இலங்கை தேயிலை மீது அதிகளவு நாட்டம் காண்பித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. உயர் நில மற்றும் தாழ்நில என இரு வகையான தேயிலைகளுக்கு உயர்ந்த கேள்வி காணப்பட்டது. 
 
இந்த வார மொத்த விற்பனை 6.3 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதி 0.5 மில்லியன் கிலோகிராம் குறைவாக காணப்பட்ட போதிலும், அதிகளவாக கேள்வி காணப்பட்டதாக ஃபோர்ப்ஸ் அன்ட் வோல்கர் டீ புரோக்கர்ஸ் கருத்து தெரிவித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .