2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'செலான் சுவர்ண சவாரி 2014' வெற்றிகரமாக நிறைவடைந்தது

A.P.Mathan   / 2014 மே 09 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை கொண்டாடும் முகமாக செலான் வங்கி பி.எல்.சி., சுவர்ணவாஹினியுடன் ஒன்றிணைந்து அண்மையில் மிகவும் வெற்றிகரமானதொரு  சைக்கிள் ஓட்டப்போட்டியை நடாத்தியது.

சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கான 'உரித்து அனுசரணையாளராக' செலான் வங்கி பி.எல்.சி.யின் பிரபலமான சேமிப்பு வர்த்தக குறியீடாக திகழும் 'Seylan SURE' செயற்பட்டது.

'செலான் சுவர்ண சவாரி 2014' என்று மிகப் பொருத்தமான முறையில் தலைப்பிடப்பட்டிருந்த இந்த சைக்கிள் ஓட்டப் போட்டியானது 115 ஆண்களும் 20 பெண்களுமாக 135 பங்குபற்றுனர்களை தம்வசம் ஈர்த்திருந்தது. இப் போட்டியாளர்கள் அனைவரும் நியம அடிப்படையிலான சைக்கிள்களை போட்டியில் ஓட்டினார்கள்.

இந்த சைக்கிளோட்டப் பந்தயம் தொடர்பில் மிகவுன்னதமான ஆர்வம் காணப்பட்டது. தொழில்சார் சைக்கிளோட்ட வீரர்கள் பலரும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சைக்கிளோட்ட வீரர்களும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

மொத்தமாக 70 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்த சைக்கிளோடப்ப போட்டி பிலியந்தலை சந்தியிலிருந்து ஆரம்பமானது. அங்கிருந்து ஹொரண, மீபே, பாதுக்க, கொட்டாவ, ஹோமாகம ஊடாகச் சென்று மாபெரும் கரகோச வரவேற்புகளுக்கு மத்தியில் பிலியந்தலை சந்தியில் நிறைவடைந்தது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டிகளின் ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் ரூபா 65,000 மற்றும் ரூபா 50,000 பணப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இவ்விரு போட்டிகளிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகள் ஒவ்வொருவரும் பணப் பரிசுகளையும் ரைஸ் குக்கர் ஒன்றையும் பரிசாக பெற்றுக் கொண்டனர். அதேவேளை, நான்கு முதல் பத்து வரையான இடங்களுக்கு முன்னேறிய போட்டியாளர்களுக்கு மின்விசிறிகளும், ரைஸ் குக்கரும் பரிசாக வழங்கப்பட்டன.

இச் சைக்கிளோட்ட பந்தய நிகழ்வுடன் செலான் வங்கியின் Seylan SURE வெகுமதி வழங்கல் திட்டம் சிறப்பான முறையில் ஒன்றிணைந்து தொழிற்பட்டது. பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Seylan SURE வெகுமதித் திட்டமானது நாடு முழுவதும் வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை குறிப்பிடத்தக்க அளவுக்கு தொட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சேமிப்புக்கள் எனும் எண்ணக்கருவுக்கு புதிய பரிமாணம் ஒன்றையும் அளித்திருக்கின்றது.

இலங்கையின் வங்கியியல் துறையில் இவ்வாறான முதலாவது முன்னெடுப்பாக திகழ்கின்ற இந்த தனிச்சிறப்புமிக்க 'செலான் SURE' வெகுமதி வழங்கல் திட்டம் 2002ஆம் ஆண்டு அறிமுகப்படு;த்தப்பட்டது. வாழ்க்கையின் நான்கு முக்கிய கட்டங்களாகவுள்ள - திருமணம், குழந்தை பிறப்பு, சிரேஷ்ட பிரஜைகளின் பிறந்த தினங்கள் மற்றும் சத்திரசிகிச்சை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இது கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக செலான் வங்கியின் வாடிக்கையாளர்களான இளையோருக்கும் முதியோருக்கும் எண்ணிலடங்காத பல வழிகளில், பரந்துபட்ட அனுகூலங்கள் மற்றும் பல வெகுமதிகளை இது வழங்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .