2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தேசிய நெடுஞ்சாலைகள் விஸ்தரிப்புக்காக 3 பில்லியன் ரூபாவுக்கு அமைச்சரவை அங்கிகாரம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 பில்லியன் ரூபா செலவில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பல்வேறு நெடுஞ்சாலைகளை விஸ்தரிப்பு செய்யவும், புனரமைப்பதற்குமான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த நிதி, வெவ்வேறு வங்கிகளின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
 
இதற்காக ஹசலக- ஹந்துன்கமுவ-ஹெட்டிபொல வரையிலான 20 கிலோமீற்றர் வீதி 312 மில்லியன் ரூபா செலவிலும், கெலனிமுல்ல-முல்லேரியா-கொஸ்வத்த வரையிலான 60 கிலோமீற்றர் வீதி 539.2 மில்லியன் ரூபா செலவிலும், குருநாகல்-நாரம்மல-மாதம்பே வரையிலான 22 கிலோமீற்றர் வீதி 744 மில்லியன் ரூபா செலவிலும் மற்றும் சீதுவ – கட்டுநாயக்க வரையிலான 3.9 கிலோமீற்றர் வீதி 103 மில்லியன் ரூபா செலவிலும் அபிவிருத்தி செய்வதற்காக உள்ளடக்கப்பட்டுள்ளன. 
 
வடக்கில் பருத்தித்துறை – பொன்னாலை வரையிலான 3 கிலோமீற்றர் வீதியை புனரமைப்பதற்காக 200 மில்லியன் ரூபாவும் இந்த ஒதுக்கீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .