
இலங்கையின் கூட்டாண்மை துறையில் முன்னோடி நிறுவனமாக திகழும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் பிரைவேற் லிமிடெட் (AMW) நிறுவனம், இலங்கையின் ரயர் துறை மற்றும் நிறுவனங்கள் குறித்த விளம்பரங்களை உள்ளடக்கிய புதிய சஞ்சிகை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சஞ்சிகைக்கு 'அபி எக்கட்ட' (நாம் ஒன்றாக) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு கண்டி, ஏர்ள்ஸ் ரீஜென்ஸி ஹோட்டலில் AMW நிறுவனத்தின் உற்பத்தி பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இலங்கையின் ரயர் விநியோகத்தர்கள் மத்தியில் இந்த சஞ்சிகை இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது. எட்டு பக்கங்களைக் கொண்ட இந்த 'அபி எக்கட்ட' (நாம் ஒன்றாக) சஞ்சிகையில், ரயர் விநியோகத்தர்களின் விபரங்கள், ரயர் உற்பத்தியில் பின்பற்றப்படும் புதிய நுட்ப முறைகள் மற்றும் ரீபில்டிங் துறை, பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துக்கள் மற்றும் துறையுடன் தொடர்புடைய இதர பொருத்தமான விடயங்கள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.
AMW இன் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் நிமல் எஸ்.ரத்நாயக்க இந்த 'அபி எக்கட்ட' (நாம் ஒன்றாக) சஞ்சிகை நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், 'நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயர் விநியோகத்தர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் மூலமாக ரயர் உற்பத்தித் துறைக்கு நிகரற்ற பங்களிப்பு வழங்கப்படுகிறது. 'அபி எக்கட்ட' (நாம் ஒன்றாக) போன்றதொரு சஞ்சிகையை அறிமுகம் செய்யும் திட்டத்தை வேறெந்தவொரு நிறுவனமும் முன்னெடுத்ததில்லை. இந்த சஞ்சிகையில் ரயர் விநியோகத்தர்கள் பற்றிய வியாபார விபரங்கள், அவர்களின் அனுபவங்கள் மற்றும் சிந்தனைகள், இந்த பாரிய துறையில் எழும் புதிய முயற்சிகள் போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த சஞ்சிகை ஒன்றின் தேவையை உணர்ந்த AMW, தற்போது அதை அறிமுகம் செய்துள்ளது' என்றார்.
'அபி எக்கட்ட (நாம் ஒன்றாக) சஞ்சிகைக்கு ரயர் விநியோகத்தர்களிடமிருந்து சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதை ஒரு சிறந்த முயற்சியாக அவர்கள் கருதி வரவேற்றுள்ளனர். இந்த வரவேற்பு AMWக்கு சிறந்த ஊக்குவிப்பாக அமைந்துள்ளது. இந்த துறையை சேர்ந்த சகலரிடமும் இருந்து இந்த சஞ்சிகையில் பிரசுரிப்பதற்கு துறைசார்ந்த ஆக்கங்களை நாம் எதிர்பார்க்கிறோம்' என ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
ரயர் ரீபில்டிங் என்பது AMWஇன் பிரதான வர்த்தக செயற்பாடுகளின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. Vacu-leg மற்றும் Die-Hard போன்ற பாரம்பரிய முறைகளுக்கமைய ரயர்களை மீள நிரப்பக்கூடிய ஆற்றலை கொண்ட இலங்கையின் ஒரே நிறுவனமாக இது திகழ்கிறது. Marathon DAG, Marathon Radial, Marathon High-Miler, OTR மற்றும் DAG போன்ற DAG ரயர் வகைகளையும் pneumatic ரயர் வகைகளான Hi-Miler, Epic Tri-Max and Epic Power-Max three- wheeler tyres, Ace-Max 155/80 D12, Far-Max 6.00X12 மற்றும் Soli-Max solid ரயர்களையும் AMW உற்பத்தி செய்து வருகிறது.
1949 ஆம் ஆண்டு AMW நிறுவனம் தாபிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் ரயர் உற்பத்தி துறையில் முன்னோடியாக இந்நிறுவனம் அமைந்துள்ளது.
உற்பத்தி மற்றும் சிறந்த சேவைகளை வழங்குவது ஆகியவற்றுக்கு தன்னை அர்ப்பணித்துள்ள நிறுவனம் எனும் வகையில், AMW உலகப்புகழ் பெற்ற வாகனங்களான Nissan, Suzuki, Suzuki Maruti, Yamaha, Piagio, New Holland மற்றும் உதிரிப்பாகங்களையும் இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது. மேலும், இந்நிறுவனம் BP, Castrol, Epic ரயர்கள் மற்றும் பற்றரி வகைகளை இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது. கெப்பிட்டல் லீசிங் கம்பனியின் பெருமைக்குரிய உரிமையாளராகவும் AMW திகழ்கிறது.
ரீடிரெடிங் மற்றும் pneumatic ரயர்களை உற்பத்தி செய்வதற்காக இரு மாபெரும் தொழிற்சாலைகளை களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் AMW கொண்டுள்ளது. பிராந்திய விநியோக நிலையத்தை கண்டியில் கொண்டுள்ளது. AMW இன் சகல உற்பத்தி செயற்பாடுகளும் தர முகாமைத்துவ சான்றிதழான ISO 9001-2008 மற்றும் சூழல் பாதுகாப்பு சான்றிதழான ISO 14001-2004 ஆகியவற்றை கொண்டுள்ளது.