2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸின் Laksala Museum Gallery Cafe விஜயம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 22 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பில் நடந்து முடிந்த 22ஆவது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ் அண்மையில் திறக்கப்பட்ட Laksala Museum Gallery Café இற்கு விஜயம் செய்துள்ளார்.
 
பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர், வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸின் அரச வரவேற்புக்குரிய இடமாக Laksala Museum Gallery Café இனை பக்கிங்ஹாம் மாளிகை தேர்ந்தெடுத்தது.
 
இலங்கைக்கு வருகை தரும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரச வம்சத்தின் பாராட்டுதல்களை Laksala Museum Gallery Café பெற்றுள்ளதுடன், அன்பளிப்பு மற்றும் நினைவுச்சுவடுகளை கொள்வனவு செய்வதற்கு உகந்த இடமாக லக்சல தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த லக்சல காட்சியறை மகிந்த சிந்தனை கொள்கை திட்டத்திற்கு அமைவாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் திவி நெகும தேசிய செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னர் லக்சல காட்சியறைக்கு தாய்லாந்து இளவரசியும், ஜப்பான் இளவரசியும் விஜயம் செய்துள்ள நிலையில், இளவரசர் சார்ள்ஸின் விஜயம் மூன்றாவது அரச வருகையாக அமைந்திருந்தது. 
ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக் கவர்ச்சிகரமான காட்சியறையின் மூலம் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .