
இளைய தலைமுறையினரின் உள்ளங்களை கவர்ந்த புகழ்பெற்ற பாடகரான இன்ஃபாஸ், சமீபத்தில் தனது புத்தம் புதிய 'ஜயகன்ன' (வெற்றி பெறுங்கள்) எனும் பாடலினை வெளியிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பாடல்களை அமைக்கும் இலங்கையின் புரட்சிகரமிக்க நவீன இசை கலைஞரான இன்ஃபாஸுடன் கைகோர்த்தமையிட்டு நிறுவனம் பெருமையடைகிறது என PRO அறிவித்துள்ளது.
இப்பாடலானது பல்வேறு பொருளாதார கஷ்டங்கள் மற்றும் சவால்களை சந்திக்கும் இளம் குத்துச்சண்டை வீரனொருவனைப் பற்றியதாகும். இந்த சவால்களை வெற்றி கொண்டு கடைசியில் உலக சாம்பியனாக வலம் வருவதை உணர்ச்சிபூர்வமாக காட்டும் வகையில் இந்த இசை வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
'ஜயகன்ன' பாடல் மற்றும் PRO இன் அனுசரணை குறித்து PRO வர்த்தகநாம முகாமையாளர் நாலக பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'PRO என்பது 'வெற்றி' பற்றியதாகும். இலங்கையின் முன்னணி ஆடவர்களுக்கான வர்த்தகநாமங்களில் ஒன்றான PRO ஆனது எப்போதும் இளைய தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதற்கும், 'வெற்றி' பெறுவதற்குமான பங்களிப்பை வழங்கி வருகிறது. தமது வாழ்வில் நாளாந்த சவால்களை சந்திக்கும் தமது PRO வாடிக்கையாளர்களை களிப்பூட்டல் மற்றும் ஊக்குவிக்கும் நோக்கில் இன்ஃபாஸின் புதிய பாடலுக்கு PRO அனுசரணை வழங்கியுள்ளது' என தெரிவித்தார்.
மனிதம் மற்றும் இளமை மட்டுமன்றி அன்பு, துயரம் மற்றும் போட்டித்தன்மை ஆகியவற்றை இந்த பாடல் விவரிப்பதாக அமைந்துள்ளது. புதிய தாளங்கள் மற்றும் சிறந்த இசை மூலம் புதுமையான படைப்புகளை தற்கால நேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் இன்ஃபாஸ் தனது புதிய பாடல் வெளியீடு குறித்து தெரிவிக்கையில், 'சமகால பாடல்களுடன் ஒப்பிடுகையில் 'ஜயகன்ன' பாடல் தனிச்சிறப்பு மிக்கது. இந்த பாடலானது இன்றைய இளைய தலைமுறையினரின் உறுதி மற்றும் உற்சாகத்திற்கு ஒளியேற்றுவதாக உள்ளது. இளைய தலைமுறையினருடன் தொடர்புடைய இப்பாடல் மிகக்குறுகிய காலத்தில் இசை தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்' என தெரிவித்தார்.
இலங்கையில் முதற்தடவையாக பாடல்வரிகள் கொண்ட வீடியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலினை தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தளம் ஊடாகவும் கீழ்காணும் லிங்க்குகள் ஊடாகவும் தற்போது ரசிகர்கள் கேட்டு மகிழலாம்.
www.youtube.com/user/prohemaswww.youtube.com/user/prohemas;
www.facebook.com/promenwww.facebook.com/promen;
www.facebook.com/infaasmusicwww.facebook.com/infaasmusic
பாடல் வரிகளை இன்ஃபாஸ் நூருதீன் மற்றும் இந்திக விக்ரமரத்ன ஆகியோர் எழுதியுள்ளனர். இசை G.O.A மூலம் வழங்கப்பட்டுள்ளதுடன், Laurus மூலம் வீடியோ தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் முன்னால் பிரகாசித்து சவாலை வெற்றிகொள்ள விரும்பும் இளைஞர்களுக்காக PRO Eau de Toilette, cologne, aftershave, Deo Body Spray மற்றும் Hair-Gel போன்ற உற்பத்திகள் நாடுபூராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.