.jpg)
பெருந்தோட்டத்துறை, துறைமுகங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகிய துறைகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் எயிட்கன் ஸ்பென்ஸ், நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3.42 வீத இலாப அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன் பெறுமதி 578 மில்லியன் ரூபாவாக அமைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய நடப்பு காலாண்டில் பங்கொன்றின் மீதான உழைப்பு விகிதம் 1.43 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும், ஆறுமாத காலப்பகுதியில் குழுமம் பங்கொன்றின் மீது 3.27 ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதற்கமைய மொத்த இலாபம் 1.3 மில்லிய்ன ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், இது 8.07 வீத அதிகரிப்பு என அறிவித்துள்ளது.
குழுமத்தின் வருமானம் செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 18.57 வீதத்தால் அதிகரித்து 9.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. மற்றும் நேரடி செலவீனங்கள் இதே காலப்பகுதியில் 5.9 வீதத்தால் அதிகரித்து 2.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.
ஆனாலும் குழுமத்தின் ஹோட்டல் துறை குறித்த காலாண்டில் 998 மில்லியன் ரூபாவை இலாபமாக பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டில் இந்த பெறுமதி 1 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.