
சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் (பிரைவற்) லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி தானிய ஆகாரமான சமபோஷ, அண்மையில் இடம்பெற்ற SLIM வர்த்தகநாம சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் 'வருடத்திற்கான சிறந்த CSR வர்த்தகநாமம்' பிரிவில் தங்க விருதினை தனதாக்கிக் கொண்டது.
இந்த விருதானது வர்த்தகநாம உத்தியின் ஒருங்கிணைந்த பகுதியாக சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தகத்திற்கு சிறப்பானவற்றை செய்து பேண்தகைமை நோக்கி சமபோஷ மற்றும்; பிளென்டி ஃபூட்ஸ் ஆகியவை வழங்கிய முன்னுதாரணமான பங்களிப்பை அடையாளப்படுத்துவதாக அமைந்திருந்தது.
'வருடத்திற்கான CSR வர்த்தகநாமம் பிரிவில் தங்க விருதினை வென்றமையும், பேண்தகைமை மற்றும் எமது ஒட்டுமொத்த கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு முயற்சிகள் தொடர்பான எமது ஈடுபாடு கௌரவிக்கப்பட்டமையும் பெருமைக்குரிய விடயமாகும்' என பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவற்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான ஷம்மி கருணாரத்ன தெரிவித்தார். 'பின்தங்கிய ஒருங்கிணைப்பு திட்டம்' மூலம் நிதிசார் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்கி எமது விவசாயிகளின் பேண்தகைமைக்காக நாம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் முன்னணி தானிய ஆகார வர்த்தகநாமமான சமபோஷ, உள்நாட்டில் விளையும் ஆரோக்கியமான மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந் நிறுவனமானது தேசிய விவசாய சமூகத்தினை மேம்படுத்துவதற்கு உதவியாக அதன் வணிக மாதிரி ஊடாக விவசாயிகளின் நலன் தொடர்பில் அக்கறை செலுத்தி வருகிறது. இன்று நாடு முழுவதும் உள்ள 8000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சமபோஷ உற்பத்தியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
பிளென்டி ஃபூட்ஸ் நிறுவன்தின் பிரதான கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு திட்டமான 'கொவி பவுல' மூலம் கிராமிய விவசாயிகளின் வாழ்க்கையை பலப்படுத்துவதற்கு தேவையான ஆதரவு வழங்கப்படுவதுடன், அவர்களின் வாழ்க்கையும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றுள் விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் குதூகலத்திற்காக 'கொவி சதுட்ட' திட்டம், அவசியமான தருணங்களில் உதவிகளை வழங்க 'கொவி சரண' திட்டம், விவசாய அறிவினை மேம்படுத்த 'கொவி தெனும' திட்டம், சமய கலாச்சார அபிவிருத்திகளுக்கு 'கொவி அரண' திட்டம் போன்றன உள்ளடங்குகின்றன.
வருடத்திற்கான CSR வர்த்தகநாமம் பிரிவில் தங்க விருது வென்றமை குறித்து CBL நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'உள்நாட்டு பெருநிறுவனம் எனும் ரீதியில், CBL ஆனது சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் தொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. எமது விவசாய சமூகத்தினரின் பெருந்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் வாழ்க்தைத்தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். இந் நிகழ்வில் பங்கேற்ற ஏனைய பெரிய கூட்டாண்மை நிறுவனங்கள் மத்தியில் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு தொடர்பான எமது முயற்சிகளுக்கு கிடைத்த இவ்விருது நிஜமாகவே கௌரவத்துக்குரியதாகும்' என்றார்.
'இவ் விருதின் மூலம் விவசாய சமூகத்திற்கு பங்காற்றிய எமது வேலைத்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவற்) லிமிடெட்டின் பொது முகாமையாளர் வசந்த சந்திரபால தெரிவித்தார். எமது வணிகத்தின் விரிவாக்கத்திற்கு தேவையான நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினை ஒப்புக்கொள்வதுடன், அவர்களது வாழ்க்கையையும் மேம்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்' என்றார்.