2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொழும்பு பங்குச்சந்தைக்கு ISO தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது

A.P.Mathan   / 2014 மார்ச் 26 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தைக்கு ISO தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொழும்பு பங்குச்சந்தையின் செயற்பாடுகள் பாதுகாப்பானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த தரச்சான்றை பெற்றுக் கொண்டுள்ளதன் மூலம் தமது பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் விபரங்கள் மற்றும் தரவுகள் அனைத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தகவல் பாதுகாப்புக்கான ISO 27001, தொடர்ச்சியான வர்த்தகச் செயற்பாட்டுக்கான ISO 22301 மற்றும் வியாபாரம், பதிவு மற்றும் வைப்பு சேவைகள், தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவம் ISO 20000 ஆகியவற்றுக்கான தரச்சான்றுகளை கொழும்பு பங்குச்சந்தை பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .