2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நாளொன்றுக்கு 2000 இற்கு மேற்பட்ட அழைப்புகளுக்கு பதிலளிக்கும் ஜனசக்தி அழைப்பு நிலையம்

A.P.Mathan   / 2014 ஜூன் 08 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் அழைப்பு நிலையத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாளொன்றுக்கு சராசரியாக 2000 இற்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படுகிறது.

'எமது அழைப்பு நிலையம், வாடிக்கையாளர்களுக்கு விரைவானதும், செயற்திறன் மிக்கதுமான சேவையை வழங்கும் வகையில் 'Orchestra' எனும் தொலைத்தொடர்பாடல் IVR சிஸ்டத்தை பயன்படுத்தி முற்றுமுழுதாக கணினி மயப்படுத்தப்பட்டுள்ளது' என கடந்த 20 ஆண்டுகளாக ஜனசக்தியுடன் இணைந்துள்ள ஃபுல் ஒப்ஷன் பிரிவின் சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் எஸ்.தனஞ்சயன் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 250 கோரிக்கைகள் தெரியப்படுத்தப்படுகிறது. மேலும் இதனை மும்மொழிகளிலும் திறமையான நன்கு பயிற்சி பெற்ற வாடிக்கையாளர் பராமரிப்பு பிரதிநிதிகளால் பெறுவதற்கு உறுதுணையான இந்த சிஸ்டத்தின் செயற்திறனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது அனைத்து பணியாளர்களும், வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் அழைப்பு நிலைய செயற்பாடுகளில் விசேட பயிற்சிகளை பெற்றுள்ளனர்.

ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது, பிரதிநிதிகள் மூலம் ஜனசக்தி மற்றும் ஜனசக்தி அல்லாத வாடிக்கையாளர்களுக்கு சேவைகள், வீதி வழிகாட்டல்கள் மற்றும் ஏனைய தகவல் சேவைகளை வழங்குவதோடு, அதன் 24 மணிநேர அழைப்பு நிலையத்திற்கு அப்பால் தன் சேவையை விஸ்தரித்துள்ளது. ஜனசக்தியானது அதன் வாடிக்கையாளர்களின் சேவை தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடிக்கடி வாடிக்கையாளர் திருப்தி கருத்துக்கணிப்புகளை முன்னெடுத்து வருகிறது.

'கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி தன் வாகனத்தின் முன் கண்ணாடி தகர்த்தெறியப்பட்ட தேவக விக்ரமசூரிய ஒரு மகிழ்ச்சியான வாடிக்கையாளர் ஆவார். அவர் அழைப்பு நிலையத்தை தொடர்பு கொண்டு ஒரு மணித்தியாலயத்திற்குள் அவரது வாகனத்தின் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டது. அங்கு வருகை தந்த மதிப்பீட்டாளர் மிகவும் பண்பானவர் மற்றும் எவ்வித படபடப்போ அல்லது தாமதமோ இன்றி எனது பிரச்சினையில் கலந்து கொண்டார்' என தேவக தெரிவித்தார்.

'இதற்கு மேலதிகமாக, ஜனசக்தி வாடிக்கையாளர் பராமரிப்பு பிரதிநிதி மூலம் ஒரு சில நிமிடத்திற்குள் முன்கண்ணாடி சேதம் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், விரைவாக ஈடு செய்வதற்கான தீர்மானம் உறுதிப்படுத்தப்பட்டது' என மேலும் அவர் தெரிவித்தார்.

'இத்தகைய ஊழியர்கள் ஜனசக்தி நிறுவனத்திற்கு பெருமையை சேர்ப்பதுடன், இத்தகைய நபர் மூலம் எனது பிரச்சனையை கையாளப்பட்ட விதத்தை பாராட்டுகிறேன்' என மேலும் தெரிவித்தார். உள்நாடு மற்றும் சர்வதேச தொழில்சார் சிறந்த நடைமுறைகளை பெறும் எமது அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசமிக்க பணியாளர்களே எமது அனுகூலங்களுக்கு காரணமாகும். தொழிற்துறை பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் வாடிக்கையாளர் பராமரிப்பு பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுவதுடன், ஜனசக்தி காப்புறுதி நிறுவனம், விரிவான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் மேலதிக பயிற்சிகளை பெற்ற 90 களப்பணி தொழில்நுட்ப அதிகாரிகளிடமிருந்தும்(மதிப்பீட்டாளர்கள்) அனுகூலங்களை பெற்றுவருகிறது' என தனஞ்செயன் தெரிவித்தார்.

'தற்போது வாடிக்கையாளர் விபத்துக்கள் தொடர்பில், சேவை பிரதிநிதிகளுக்கு புரட்சிகரமான ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் லொகேட்டர் எனும் வலைத்தளத்தை பயன்படுத்தி அறியப்படுத்த முடியும். இதற்கு மேலதிகமாக, எமது சேவை பிரதிநிதி, வாடிக்கையாளருக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாது விபத்து இடம்பெற்ற துல்லியமான இடத்தை Google Maps ஐ பயன்படுத்தி அறிந்து கொள்வார்' என தனஞ்செயன் தெரிவித்தார்.

ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் நிலையம் அண்மையில் தனது 10 ஆண்டுகாலச் சேவையை கொண்டாடியதுடன், ஆண்டின் 365 நாட்களும் திறந்திருக்கும் 24 மணிநேர அழைப்பு நிலையத்தை ஆரம்பித்த காப்புறுதி துறையின் முதலாவது நிறுவனம் இதுவாகும்.

ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் நிலையம், கடந்த 2004 ஆம் ஆண்டு 6 களப்பணி அதிகாரிகள், 6 வாடிக்கையாளர் தொடர்பு பிரதிநிதிகள் மற்றும் முகாமையாளர் ஒருவருடன் மிக எளிமையாக தொடங்கப்பட்ட இந்த அழைப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று சுமார் 330 பணியாளர்களினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .