2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் 38 அறைகளை கொண்ட நவீன வாடி வீடு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட பிராந்தியத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 38 அறைகளைக் கொண்ட நவீன வாடி வீடு ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த வாடி வீட்டை நிர்மாணிப்பதற்கு அவசிமயான காணியை பெற்றுக் கொள்வதற்கான அதிகாரத்தையும் அமைச்சரவை, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியுள்ளது.

10 வருட அபிவிருத்தி திட்டத்துக்கு அமைவாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரதான நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .