2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

'Construct 2015' நிகழ்வுக்கு உத்தியோக்பூர்வ வங்கியாளர்களாக ஆதரவு வழங்கிய கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு ஆசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய நிர்மாணத்துறை கண்காட்சியாகத் திகழும் 'Construct 2015' நிகழ்வுக்கு உத்தியோகபூர்வ வங்கியாளர்களாகச் செயற்பட்டு கொமர்ஷல் வங்கி தனது ஆதரவை வழங்கியுள்ளது.

தேசிய நிர்மாணத்துறை சங்கம் (NCASL) வருடாந்தம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது. ஓகஸ்ட் 28,29,30 ஆகிய திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளவில் தொடர்ந்து 15வது வருடமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்தக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிர்மாணத் துறையினருக்கும் கண்காட்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் வங்கி அதன் பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து வைத்தது. வீடமைப்புக் கடன், தனியார் கடன், குத்தகை, கடன் அட்டை, இணைய மற்றும் நடமாடும் வங்கிச் சேவை வசதிகள் என பல்வேறு சேவைகள் இங்கு அறிமுகம் செய்யப்பட்டன. வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தொடர் கழிவுகளைப் பெற்றுக் கொடுப்பது பற்றியும் நிர்மாணத் துறை சார்ந்தவர்களோடு வங்கி வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது.

Construct 2015 கண்காட்சி வளவில் கொமர்ஷல் வங்கி கரும பீடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கொமர்ஷல் வங்கி தலைவர் தர்மா தீரசிங்கவுடன் உரையாடுவதைப் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X