Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 23 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையிலான முதலாவது ஒன்றிணைந்த வென்ச்சர் கெப்பிட்டல் நிதியமான BOV கெப்பிட்டல், இலங்கையின் தொழில்நுட்ப ஏற்றுமதி சம்பந்தமான பொருட்கள் மற்றும் சேவைகள் துறையில் கவனம் செலுத்தும் வகையில், OMAK டெக்னொலஜிஸ் நிறுவனத்தின் தனது முதலீடுகளை மேற்கொண்டிருந்தது. பிராந்திய மட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் உணவக முகாமைத்துவத் தீர்வுகளை வழங்குவதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கையில் தனது பிரதான அலுவலகத்தை கொண்டுள்ளது. 85 மில்லியன் ரூபாய் பெறுமதியான முதலீடுகளை பூர்த்தி செய்துள்ள OMAK டெக்னொலஜிஸ், இந்தப் புதிய முதலீட்டுடன் தெற்காசியப் பிராந்தியத்தில் ஆக்ரோஷமான விஸ்தரிப்புச் செயற்பாடுகளைப் பதிவு செய்யவுள்ளது.
Cloud அடிப்படையிலான, SaaS (Software as a Service) தீர்வுகளை வழங்கி வரும்OMAK டெக்னொலஜிஸ், தனது பிரதான தீர்வான OMAK POS 360, முழுமையாக ஒன்றிணைக்கப்பட்டத் தீர்வுகளான உணவகத்தின் செயற்பாடுகள், வருமானத்தை அதிகரிப்பது முதல் செலவீனங்களைக் குறைத்தல், அநாவசியமான இழப்புகளைத் தவிர்ப்பது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. இலங்கை, இந்தோனேசியா, மாலைதீவுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் உறுதியான கால்தடத்தைப் பதித்துள்ள OMAK நிறுவனம், தென் கிழக்காசியா நாடுகளில் ஆக்ரோஷமான வளர்ச்சித்திட்டங்களைக் கொண்டுள்ளது. இலங்கையில் காணப்படும் நிறுவனங்களுடன் நெருக்கமாகச் செயற்படும் வகையில், முதலீடுகளை மேற்கொண்டு வரும் BOV கெப்பிட்டல், $100,000 முதல் $2 மில்லியன் வரையான முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் இதுவரையில் 20க்கும் அதிகமான முதலீடுகளை கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொண்டுள்ளது. இலங்கையின் தொழில் முயற்சியாண்மை சூழலை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கை வகிக்கின்றதுடன், பெறுமதி வாய்ந்த ஆலோசனைகள் மற்றும் ஆழமான புரிந்துணர்வையும் வழங்கி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .