Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் (SLIM) ஏற்பாடுச் செய்யப்பட்ட தேசிய விற்பனைக் காங்கிரஸ் (NASCO) விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனத்தின் ஊழியர்கள், விற்பனையில் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டு சிறப்புத்தன்மைக்காக, நிதி திட்டங்கள் மற்றும் சேவைகள் பிரிவில் பிரதேச முகாமைத்துவப் பிரிவில் விருதுகளை வென்றுள்ளனர்.
இந்த விழாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, வர்த்தக அபிவிருத்திப் பிரிவின் முகாமையாளர் அரவிந்த பெரேரா தங்க விருதையும், தெஹிவளை கிளைத் தலைவர் மலித் பெரேரா வெள்ளி விருதையும், கிளைத் தலைவர் மஹர பந்துல குமார வெண்கல விருதையும் வென்றெடுத்திருந்தனர். NASCO விருதுகள் விழாவில், ஒவ்வொரு ஆண்டுக்குமான அனுமதிகள் அதிகரித்து வருவதுடன், இங்கு விற்பனை தொழிற்றுறையில் சாதனையீட்டுபவர்கள் கௌரவிக்கப்படுவதுடன், விற்பனை நிபுணர்கள் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான கற்றல் மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்தி வருகிறது. NASCOஇல் உள்நாட்டுப் பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மிகச்சிறந்த விற்பனை தலைவர்கள் முன்னிலையில் நேர்காணல்கள் மற்றும் கடுமையான எழுத்து மூல பரீட்சைகள் ஊடாகவே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த விழாவில் விருதை வென்ற அரவிந்த கருத்து தெரிவிக்கையில், “CDB ஆகிய எம்மால் வாடிக்கையாளருக்கு மிகச்சிறந்த சேவைகளை வழங்குவதை இவ்விருது பறைச் சாற்றுவதுடன், மேலும் சிறப்பாகச் செயலாற்றுவதற்காக எம்மை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது” மேலும் வெள்ளி விருதை வென்ற மலித்” இந்த விழாவில் எமது அர்ப்பணிப்பு கௌவிக்கப்பட்டமையானது, எமது விற்பனை குழுவுக்கு பெருமைக்குரிய விடயமாக உள்ளதுடன், இதை சாத்தியப்படுத்திய எமது ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
மேலும், மற்றொரு விருதை வென்ற பந்துல கருத்து தெரிவிக்கையில், “எமது இலக்குகளை எய்துவதற்கான அனைத்து ஊக்குவிப்புகளும் CDB நிறுவனத்தில் எமக்கு கிடைத்துள்ளன. எமது வாடிக்கையாளருக்கு சேவைகளை வழங்குவதற்கான எமது உறுதி மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் இவ்விருதினை எமது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுவுடன் இணைந்து பெறுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
37 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
2 hours ago