2025 ஜூலை 30, புதன்கிழமை

‘Trail 2016’ முன்னெடுப்புக்கு Ocean Lanka பங்களிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 23 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதியொன்றை நிர்மாணிப்பதற்கு, 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைத் திரட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட Trail 2016 நடைபவனிக்கு, Ocean Lanka நிறுவனம் வெண்கல அனுசரணையை வழங்கியது.

இந்த நற்பணிக்காகக் கணிசமானத் தொகைக் கொண்ட நன்கொடையை வழங்குவதற்கு நிறுவனம் ‌உறுதிமொழியளித்து
ள்ளதுடன், இதற்கு மிகுந்த உற்சாகத்துடன் நிறுவன ஊழியர்களும் ஒன்று சேர்ந்து இந்த நற்பணிக்காக மேலும் நன்கொடையாகத் தமது பங்களிப்பையும் வழங்கியிருந்தனர். இலங்கை எங்கிலும் சமூகங்கள் மத்தியில் ஐக்கியத்தை வளர்த்து, புற்றுநோய்க்கு எதிராக ஒரே தேசமாக ஒன்றுபட்டுப் போராடுவதை ஊக்குவிக்கும் ஒர் முயற்சியாக Colours of Courage Trust நற்பணி மன்றத்துடன் இணைந்து, 2011 ஆம் ஆண்டில் Trail 2016 முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

Ocean Lanka நிறுவனம், தனது ஊழியர்கள் மத்தியில் எப்போதும் நிலைபேற்றியல் குடியாண்மை கலாச்சாரத்தை வளர்த்து வருவதுடன், அதில் பணியாற்றிவருகின்ற ஊழியர்களில் 100 பேர் Trail 2016 நிகழ்வின் கொழும்பு பாகத்தில் பங்குபற்றியுள்ளனர். நிறுவனம் தான் கடைப்பிடித்து வருகின்ற தொழில்தர்மம் மற்றும் நிலைபேற்றியல் நடைமுறை மரபினை தனது ஊழியர்கள் மத்தியிலும் வளர்த்து வருவதுடன், சமூகத்தின் நலனைப் பேணும் பொறுப்பைக் கையிலெடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு குழுக்களின் நன்மைக்காகத் தனது வளங்களை தன்னார்வத்தொண்டில் ஈடுபடுத்துவதிலும் பின்னிற்பது கிடையாது.Ocean Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஒஸ்டின் ஆவு நிறுவனத்தின் பங்குடமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,“சமூகத்தின் அனைத்து வகுப்புக்களையும் சார்ந்த மக்களையும் பொதுவான ஒரு நல்நோக்கத்திற்காக ஒன்றுதிரட்டி, இலங்கையில் ஐக்கியத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்துவதில் Trail 2016பாரிய பங்கு வகித்துள்ளது. எனறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .