
இலங்கையில் அதிகளவு தேவையாக காணப்படும் IT/BPM கொள்ளளவை விஸ்தரிக்கும் வகையில், SLASSCOM உப தலைவர் மனோ சேகரம் பிராந்திய மட்டத்தில் இரண்டாம் நிலை நகரங்களை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
IT/BPM துறை என்பது தற்போது நாட்டின் ஏற்றுமதி வருமானத்தையீட்டும் சிறந்த முதல் ஐந்து துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதன் பெறுமதி 2013 இல் 720 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டில் காணப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 33700 இலிருந்து 2013 ஆம் ஆண்டில் 75100 ஆக அதிகரித்திருந்தது.
தகவல் தொடாபாடல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியில் இந்த துறை பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த துறை நாட்டின் பொருளாதார மாற்றத்தில் முக்கியபங்காற்றியிருந்தது. தேசிய மட்டத்தில் இணைப்பை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல வேண்டிய அவசர தேவை காணப்படுகிறது. IT/BPM பிரிவு என்பது இந்த துறையின் பிரதான முன்னெடுப்பாளராக அமைந்திருக்கும்.
இலங்கை என்பது IT மற்றும் BPM சேவைகளுக்காக வேகமாக வளர்ந்து வரும் மத்திய நிலையமாக அமைந்துள்ளது. குறிப்பாக உயர் வளர்ச்சி வாய்ப்பை கொண்டுள்ளது. AT Kearney தரப்படுத்தலின் பிரகாரம் இலங்கை உலகளாவிய ரீதியில் காணப்படும் சிறந்த 25 நாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் IT/BPM வெளிக்கள சேவைகளுக்கான சந்தை என்பது 403 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 2022 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பிரதான வெளிநாட்டு வருவாயை ஈட்டித்தரும் துறையாக திகழ்வது என்பது இலக்காக அமைந்துள்ளது. 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகவும், 200,000 நேரடி தொழில் வாய்ப்புகளையும், 1000 புதிய நிறுவனங்களையும் கொண்டிருப்பது இந்த இலக்கின் படிகளாகும்.
SLASSCOM இன் உப தலைவரும், 99X Technology இன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'கொழும்பை மையமாக கொண்டு வளர்ச்சி பதிவாகி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் ஒவ்வொரு பாகங்களையும் சென்றடையக் கூடிய வளர்ச்சி நடைமுறை ஒன்றை பின்பற்ற வேண்டியதன் அவசியம் காணப்படுகிறது. இந்த செயற்பாட்டை வேகமாக முன்னெடுக்கும் முறை என்பது, பின்தங்கிய பிரதேசங்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை விஸ்தரிப்பது அமைந்துள்ளது. இதற்காக பிராந்திய நகரங்களை அமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது' என்றார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'IT/BPM துறை என்பது எந்த பகுதியிலிருந்து இயங்கக்கூடியது. இதற்காக சிறந்த வணிக சூழல் மற்றும் உறுதியான வளங்கள் காணப்பட வேண்டும். பிராந்திய மட்டத்தில் எமது பல மனித வளங்கள் காணப்படுகின்றன. தலைநகரின் 80 வீதமான ஊழியர்கள் இந்த பகுதிகளிலிருந்து வருகை தருகின்றனர்' என்றார்.
மேலும், இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் என்பது கொழும்பை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. ஏற்கனவே நூற்றுக்கணக்கான IT/BPM நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை இந்த பகுதிகளில் கொண்டுள்ளன. காலப்போக்கில் இந்த நிலை தொடருமாயின், அதிகளவு இடநெருக்கடி நிலை ஏற்படுவதுடன், அதிகரித்த செலவீனங்களும், கம்பனிகளின் செயற்பாடுகளுக்கு அதிக செலவீனத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.
இதன் காரணமாக மேல் மாகாணத்துக்கு வெளியே இரண்டாம் நிலை நகரங்களை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகிறது. தமது சொந்த பகுதிகளில் வசிப்பதன் மூலம் தொழில் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமது வாழ்க்கைத்தரங்களை கட்டியெழுப்பிக் கொள்ளவும் முடியும். இந்த செயற்பாடுகளின் மூலம், மத்திய வருமானமீட்டும் நாடாக இலங்கையை மாற்றும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறும். இந்த மாற்றத்தின் மூலம் அதிகளவு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்கள் இந்த மாற்றீட்டு நகரங்களாக இனங்காணப்பட்டுள்ளன. இதுவரையில், குறித்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், இணைப்பு, திட்டமிட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் போன்றன ஆளுமை படைத்த ஊழியர்களை உருவாக்கும்.
இதற்கு தனது பங்களிப்பாக SLASSCOM பிராந்திய மட்டத்தில் IT/BPM மைய கொள்கை என்பது வர்த்தக செயற்பாடுகளுக்கு வேகமாக வளர்ந்து வரும் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறது.