
சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (CBL) துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி தானிய ஆகாரமான சமபோஷ மூலம் அண்மையில் 'சமபோஷ ReadyMix' எனும் புதிய காலையுணவு தயாரிப்பு உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரிசி, சோயா, பயறு மற்றும் சோளம் உள்ளடங்கிய உள்நாட்டு சந்தையில் புகழ்பெற்ற தானிய ஆகாரமான சமபோஷவின் சுவை மற்றும் போசாக்கு மாறாமல் இப் புதிய ReadyMix' தயாரிக்கப்பட்டுள்ளது.
.jpg)
இன்றைய பரபரப்பான வாழ்க்கைக்கு சமபல போசாக்கினை வழங்கும் முழுமையான உடனடி காலையுணவாக 'ReadyMix' விளங்குகிறது. இந்த கலவையினுள் உலர் தேங்காய் மற்றும் சீனி சேர்க்கப்பட்டுள்ளமையினால், எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு இடத்திலும் உணவாக உட்கொள்ளக்கூடிய வசதி காணப்படுகிறது. மேலதிகமாக பாலினை மாத்திரம் சேர்த்து சமபோஷ அக்கல, தேங்காய் டொஃபி மற்றும் ஏனைய தின்பண்டங்களை இலகுவாக செய்துகொள்ள முடியும். குழந்தைகளுக்கான உணவு மாற்றீடாக, வியாபார ஸ்தானங்களில் அல்லது சுற்றுலா பயணங்களின் போது இலகுவாக உணவாக எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில் 'சமபோஷ ReadyMix' தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது 'ReadyMix' சௌகரியமான பொதிகளில் கிடைக்கின்றது. காற்றுப்புகாத மூடி மற்றும் கொள்கலனில் வரும் இந்த கலவையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. வாடிக்கையாளரின் சௌகரியம் கருதி, 'ReadyMix' தயாரிப்புகள் தற்போது முன்னணி வர்த்தக நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்கெட்டுகளில் 400கிராம் கொள்கலனில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த புதிய தயாரிப்பின் அறிமுகம் குறித்து மஞ்சி வர்த்தகநாமத்தின் பொது சந்தைப்படுத்தல் முகாமையாளர் தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து நாம் தொடர்ந்து விழிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். ஆராய்ச்சிகள் மற்றும் புதுமைகள் ஊடாக உயர் போசாக்குடனும், தயாரிப்பதற்கு இலகுவானதுமான பல்வேறு உற்பத்திகளை நாம் அறிமுகம் செய்துள்ளோம். இதன் காரணமாகவே அரிசி, சோளம், பயறு, சோயா ஆகியவற்றின் குணநலன்கள் கொண்ட சமபோஷ அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து போசiணையும் ஒன்றிணைத்த இந்த புதிய சமபோஷ ReadyMix இன் அறிமுகத்தின் மூலம் உங்கள் நேரத்தை சேமிக்கவும் எம்மால் முடிந்துள்ளது' என தெரிவித்தார்.
சோளம், அரிசி, பயறு மற்றும் சோயா ஆகிய தானிய வகைகளுக்கு மேலதிகமாக சமபோஷ தயாரிப்பில் 9 விற்றமின்கள் மற்றும் கனியுப்புகள் அடங்கியுள்ளன. சமபோஷவில் இரசாயன சேர்மானங்கள், சுவையூட்டிகள், வர்ணங்கள், அதிகநாள் பேணி வைப்பதற்கான சேர்மானங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயர்தரம் மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் பாதுகாப்பு காரணமாக சமபோஷவிற்கு SLS, ISO-22000, HACCP மற்றும் GMP போன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.