2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

10 ஆண்டுகால சேவையை கொண்டாடும் ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன்

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் நிலையம் தனது 10 ஆண்டுகாலச் சேவையை கொண்டாடுகிறது. விபத்தின் போது களத்தில் வைத்து மோட்டார் ஓட்டுநரின் வாகனத்திற்குரிய சேதத்தை கண்டறிய, உடனடி பண மீளப்பெறுகைக்கான செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் 24 மணிநேர அழைப்பு நிலையத்தை ஆரம்பித்த காப்புறுதி துறையின் முதலாவது நிறுவனம் ஜனசக்தியாகும்.

இந்த அழைப்பு நிலையத்தின் விசேட அம்சம் எதுவெனில், உதிரிப்பாகங்கள், பழுதுபார்த்தல்கள் மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு வசதியாக காணப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு 6 களப்பணி அதிகாரிகள், 6 வாடிக்கையாளர் தொடர்பு பிரதிநிதிகள் மற்றும் முகாமையாளர் ஒருவருடன் மிக எளிமையாக தொடங்கப்பட்ட இந்த அழைப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று சுமார் 350 பணியாளர்களினால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 2004 முதல் 2013 வரை ஃபுல் ஒப்ஷன் நிலையத்தின் மூலம் ரூ.18 பில்லியனுக்கும் அதிகமான உரிமைக்கோரல்கள்; ஃபுல் ஒப்ஷன் காப்புறுதிதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

'இந்த நிலையமானது வருடம் முழுவதும்; அதாவது தேர்தல் இடையூறுகள் அல்லது வேலை நிறுத்தங்கள் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும் கூட 365 நாட்களும் 24 மணிநேரச் சேவையை வழங்கி வருகின்றது' என ஜனசக்தி நிறுவனத்துடன் 20 ஆண்டுகள் இணைந்துள்ள ஃபுல் ஒப்ஷன் நிலையத்தின் சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் எஸ்.தனஞ்செயன் தெரிவித்தார்.

'ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் நிலையத்தின் மூலம் நாட்டின் எந்த பிரதேசத்திலிருந்தும் எமது வாடிக்கையாளர்கள் தமது கோரல் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், நாள்தோறும் 200 முதல் 220 வரையான மோட்டார் நஷ்டஈடு கோரல்கள் வழங்கப்படுகின்றன. இந்த வெற்றிக்கு திறமையான செயல்பாடு மற்றும் கோரல் மேலாண்மை முறைமையே காரணமாகும்' என மேலும் அவர் தெரிவித்தார்.

'உள்நாடு மற்றும் சர்வதேச தொழில்சார் சிறந்த நடைமுறைகளை கொண்ட எமது அர்ப்பணிப்பானதும், விசுவாசமிக்கதுமான பணியாளர்களே எமது அனுகூலங்களுக்கு காரணமாகும். தொழில்முறை பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் வாடிக்கையாளர் பராமரிப்பு பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுவதுடன், ஜனசக்தி காப்புறுதி நிறுவனம், விரிவான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் மேலதிக பயிற்சிகளை பெற்ற 90 களப்பணி தொழில்நுட்ப மதிப்பீட்டாளர்களிடமிருந்தும் அனுகூலங்களை பெற்றுக்கொள்கிறது. ஒருசில மதிப்பீட்டாளர்கள் மோட்டார் வாகன திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தரமான பயிற்சிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது' என மேலும் அவர் தெரிவித்தார்.

மதிப்பீட்டாளர்களுக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து சிறந்த தொழில் அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரேயொரு காப்புறுதி நிறுவனம் ஜனசக்தியாகும். மேலும் பெண்களை மதிப்பீட்டாளர்களாக பணிக்கமர்த்தும் ஒரேயொரு நிறுவனமும் இதுவாகும்.

மோட்டார் மதிப்பீட்டினை தவிர, வாடிக்கையாளரின் வாகனம் Flat டயர் அல்லது என்ஜின் கோளாறு ஏற்பட்டால் உடனே ஒரு நண்பருக்கு உதவிடும் வகையில் எமது கள மதிப்பீட்டாளர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான சாலை உதவிகள் வழங்கப்படுகின்றன' என தனஞ்செயன் தெரிவித்தார்.
'ஜனசக்தி நிறுவனம் அதன் பாரபட்சமற்ற மனப்பாங்கு குறித்து பெருமையடைகிறது. எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் மூலம்; வலுவான உரிமைக்கோரல் கொடுப்பனவுகளை பேண முடிந்துள்ளதுடன், 2013ஆம் ஆண்டில் ரூ.2.7 பில்லியன் பெறுமதியான மோட்டார் கோரல்களை செலுத்த எம்மால் முடிந்துள்ளது' என ஜனசக்தி நிறுவனத்தின் மோட்டார் பிரிவின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் கௌஷலா அமரசேகர  தெரிவித்தார்.

'எமது வாடிக்கையாளர்களின் வசதி கருதி உரிமைக்கோரல் கொடுப்பனவுகளை நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு நாம் அனுப்பி வைப்பதுடன், நாடு முழுவதும் உள்ள 100 கிளைகளில் அவர்கள் தெரிவு செய்யும் எந்தவொரு கிளைக்கும் கொடுப்பனவு தொகை அனுப்பி வைக்கப்படுகிறது' என மேலும் அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மோட்டார், பொது, ஆயுள் மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளை கையாளக்கூடிய விதத்தில் விசேட பயிற்சிகளை பெற்றுள்ளனர். இந் நிறுவனத்தின் மூலம் பாடசாலை கல்வியை நிறைவு செய்து அலுவலக பணியாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஜனசக்தி நிறுவனம் கடந்த 2013 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் ஆறு மாதத்தில் என்றுமில்லாதவாறு வரிக்கு பிந்திய இலாப வளர்ச்சியாக 78 சத வீதத்தை பதிவு செய்துள்ளது. மேலும் ஆயுள் மற்றும் ஆயுட்சாரா காப்புறுதிதாரர்களுக்கு இதுவரை 1.9 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான கோரல் கொடுப்பனவுகளை வழங்கியுள்ளது. ஜனசக்தி நிறுவனமானது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகிய இருபாலருக்கும் அனுகூலங்களை வழங்கக்கூடிய சாதகமான வணிக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. இதனை பூர்த்தி செய்யும் நோக்கில், இந் நிறுவனமானது ஊழியர் பயிற்சி மற்றும் முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் அதன் கிளை வலையமைப்பினை மறுசீரமைப்பதற்கான மூலோபாய அணுகுமுறைகளில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .