2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

100 இலவச வெண்புரை (கட்ரக்) சத்திரசிகிச்சைகள்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான சமூக, கலாசார ஒத்துழைப்புச் சங்கம், சீனாவின் AIDI கண் சிகிச்சை வைத்தியசாலை, சீனாவின் Sichuan அரிமா கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையில் வறுமையின் கீழ் வாழ்கின்றவர்களுக்கு 100 இலவச வெண்புரை சத்திர சிகிச்சைகளை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் முன்னெடுத்துள்ளது.

கண்புரை சத்திரசிகிச்சைகள் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அண்மையில் அவை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் அணியின் உதவியுடன், சீனாவின் பிரபல கண் வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர் குழுவினர் இந்தச் சத்திர சிகிச்சைகளை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் சத்திர சிகிச்சைக்கூடத்தில் நடத்தியுள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .