
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து ஒராக்கள் கோர்ப்பரேஷன் சிங்கப்பூர் லிமிடெட், கணனி விஞ்ஞான திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட கணனி விஞ்ஞான நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு அமைவாக எதிர்வரும் இரு ஆண்டுகளில் 10,000 மாணவர்களை தயார்ப்படுத்தும் வகையில் நாடு முழுவதிலும் காணப்படும் 70 தொழிற்பயிற்சி நிலையங்களின் மூலம் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் அதிகரித்துச் செல்லும் உயர் ஆளுமை வாய்ந்த ஊழியர்களுக்கான கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கும்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை கைச்சாத்து தொடர்பில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் கேணல் தர்ஷன ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'தொழிற்பயிற்சி அதிகார சபை என்பது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கல்விகளை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளது. இதன் மூலம் ஆளுமை வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தோற்றுவிக்க நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அவர்களின் ஆளுமைகள் தனியார் மற்றும் பொதுத் துறைகளுக்கு பொருத்தமான வகையில் அவசியமான வழிகாட்டல்களை வழங்குகிறது' என்றார்.
'இலங்கையில் தகவல் தொழில்நுட்ப சான்றிதழ்கள் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சூழலில் இவ்வாறு அதிகளவு வரவேற்பு காணப்படுகிறது. துறையின் முன்னோடியான ஒராக்கள் உடன் இணைந்து இந்த பயிற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை பெற்றுக் கொடுக்க முடியும்' என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக, ஒராக்கள் அக்கடமியின் மென்பொருள் தொழில்நுட்பம், பயிற்சி, உதவிகள் மற்றும் சான்றளிப்பு வளங்கள் போன்றன நிலையத்தின் மாணவர்களுக்கு வழங்கப்படும்.