2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2013ஆம் ஆண்டின் மொத்த வருமானத்தை 2014ஆம் ஆண்டின் முதல் 22 நாட்டிகளில் கடந்தது கொழும்பு பங்குச்சந்தை

A.P.Mathan   / 2014 ஜனவரி 23 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தை தொடர்ந்தும் உயர்வான பெறுமதிகளை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிந்தது. நேற்றைய தின கொடுக்கல் வாங்கல்கள் நிறைவின் போது, 2013ஆம் ஆண்டில் பங்குச்சந்தை பெற்றிருந்த மொத்த வருமானத்தை, நடப்பு ஆண்டின் முதல் 22 நாட்களில் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மொத்த வெளிநாட்டு கொள்வனவுகள் 1 பில்லியன் ரூபா பெறுமதியை அண்மித்து காணப்பட்டது.
 
நேற்றைய தினம் பங்கு கொடுக்கல் வாங்கல்கள் நிறைவின் போது பதிவாகியிருந்த பெறுமதிகள் கடந்த 2013 ஓகஸ்ட் 19ஆம் திகதியின் பின்னர் பதிவாகியிருந்த அதியுயர்ந்த பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வாரத்தின் முற்பகுதியில் சிங்கப்பூரில் இடம்பெற்ற விழிப்புணர்வு செயற்திட்டத்தை தொடர்ந்து, வெளிநாட்டவர்களின் ஆர்வம் கொழும்பு பங்குச்சந்தையில் அதிகரித்து காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .