2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

2013 பொருளாதார வளர்ச்சி 6.8 வீதமாகவும், பணவீக்கம் 7.0 வீதமாகவும் அமைந்திருக்கும்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.8 வீதமாக பதிவாகும் எனவும், பணவீக்கம் 7 வீதமாக அமைந்திருக்கும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.
 
பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கக்கூடிய வலுப்பிறப்பாக்கல் துறையானது கடந்த மே மாதம் 9.2 வீதத்தால் வளர்ச்சியடைந்து காணப்பட்ட போதிலும், ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்திருந்ததாக ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோன்று, இறக்குமதி செயற்பாடுகள் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
 
2014ஆம் ஆண்டுக்கான எதிர்வுகூறலின் பிரகாரம் பொருளாதார வளர்ச்சி 7.2 வீதமாகவும், பணவீக்கம் 6.5 வீதமாகவும் அமைந்திருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .