2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஜனசக்தி லைஃவ்சேவர் வழங்கும் பாதுகாப்பான எதிர்காலம்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் காப்புறுதி துறையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக திகழும் ஜனசக்தி, தமது மற்றுமொரு புதிய காப்புறுதி திட்டமான ஜனசக்தி லைஃவ்சேவர் காப்புறுதி திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. வாழ்;நாள் முழுவதும் ஓய்வூதிய அனுகூலங்களை அனுபவிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காப்புறுதி திட்டம், காப்புறுதிதாரர் மற்றும் அவரின் வாழ்க்கைத்துணையையும் பாதுகாத்திடும் வகையில் அமைந்துள்ளது. வாழ்வில் முதிர்வான காலப்பகுதிக்கென பொறுப்பான முறையில், இலகுவாக, வரி விலக்கழிப்புடனான ஒரு சேமிப்பை மேற்கொள்வதற்கான காப்புறுதி திட்டமாக அமைந்துள்ளது.

இந்த காப்புறுதி திட்ட அறிமுகம் குறித்து ஜனசக்தி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் சிஹாரா டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'உலகில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்த வண்ணமுள்ளது. இன்னும் சில தசாப்த காலப்பகுதியில், உலகின் மொத்த சனத்தொகையில் 65 வயதை விட அதிகமானவர்களின் எண்ணிக்கை பெரும் பங்கை வகிக்கும். இலங்கையை பொறுத்தமட்டில் இந்த நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தனிநபர்கள் அதிகளவு சுதந்திரமாகவே இருக்க விரும்புகின்றனர். எனவே இந்த நபர்கள், தமது வாழ்நாளில் முதுமை பருவத்தை அடைந்ததும், தம்மில் தாமே தங்கியிருந்து, சுயமாக தமக்கு விரும்பிய விதத்தில் தமது முதுமையை களிக்கவே அதிகம் விரும்புகின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு, தற்போது தொழில்புரியும் சமூகமானது, தமது எதிர்கால ஓய்வூதியம் குறித்து முறையாக முன்கூட்டியே திட்டமிடுவது அத்தியாவசியமாகிறது. பொறுப்புணர்வு வாய்ந்த முன்னணி காப்புறுதி நிறுவனம் எனும் வகையில் நாம் ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் காப்புறுதிதாரர்கள் தமது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான வருமானமொன்றை உறுதி செய்து கொள்ள முடிவதுடன், தமக்கு பின்னர், வாழ்க்கைத்துணைக்கும் இவ் அனுகூலங்களை வழங்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன், காப்புறுதிதாரருக்கு ஆயுள் காப்புறுதியும் வழங்கப்படுகிறது' என்றார்.

ஜனசக்தி லைஃவ்சேவர் ஓய்வூதிய திட்டமானது, காப்புறுதிதாரர்களுக்கு பல அனுகூலங்கள் வழங்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்புறுதி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு வயது வரையறைகள் எதுவுமில்லை. ஒவ்வொரு நபரின் தேவைகளுக்கு அமைய, எவ்வேளையிலும் இந்த திட்டத்தை ஆரம்பிக்கக்கூடிய வசதிகளும் காணப்படுகின்றன. ஜனசக்தி லைஃவ்சேவர் காப்புறுதி திட்டத்தில் எவ்வேளையிலும் எந்தளவு தொகையையும் (ஆகக்குறைந்தது ரூ.1000) செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமது தொழில்புரியும் காலத்தில் தம்மாலான இயன்ற தொகையை தமது முதுமைப்பருவத்துக்கென ஒதுக்கிக்கொள்வதன் மூலம், ஜனசக்தி லைஃவ்சேவர் காப்புறுதிதாரர்கள் உறுதியான வருமானத்தை வாழ்நாள் முழுவதும் பெற்றுக்கொள்ள முடியும். 

மேலும் இந்த காப்புறுதி ஆரம்பிக்கப்பட்டு 12 மாதங்கள் கழிந்த பின்னர், திட்டத்துக்கு தொடர்ந்தும் பணத்தை வைப்பிலிட முடியாமல் போகும் சந்தர்ப்பம் ஏற்படின், காப்புறுதி செயலிழக்காது. இதன் மூலம் காப்புறுதிதாரரின் முதலீடு பாதுகாக்கப்பட்டு, எதிர்காலத்தில் உறுதியான வருமானத்தை உறுதி செய்கிறது, காப்புறுதிதாரர் தனது வாழ்க்கைத்துணையுடன் இணைந்து ஓய்வூதிய திட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. ஜனசக்தி லைஃவ்சேவர் ஓய்வூதிய திட்டம், ஆயுள் காப்புறுதியையும் உள்ளடக்கியுள்ளது. விபத்து அல்லது நோய் காரணமாக முழுமையாக அங்கவீனமடையும் நிலையில் முழுமையான காப்புறுதியையும் வழங்கும் வகையில் இந்த ஆயுள் காப்புறுதி அமைந்துள்ளது. மேலும், முதிர்வின் போது, வரி விலக்கழிக்கப்பட்ட அனுகூலங்கள் வழங்கப்படுவதால் காப்புறுதிதாரர்கள் இந்த ஓய்வூதிய காப்புறுதி திட்டத்தின் முழுமையான அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும். 

ஜனசக்தி லைஃவ்சேவர் என்பது, பிரத்தியேக ஓய்வூதிய திட்டமாகும். இதன் மூலம் தமது ஓய்வூதியம் பெறும் காலப்பகுதியில் பெறும் அனுகூலங்கள், தற்சமயம் எந்த நிறுவனத்தில், எந்த தொழில்நிலையில் உள்ளார் போன்ற விடயங்களில் தங்கியிருப்பதில்லை. எந்த வயதிலும், எந்த தொழில்நிலையிலும் உள்ள ஒரு நபர் முழுமையான ஓய்வூதியமொன்றை பெறவிரும்பின் பெற்றுக் கொள்வதற்கு சிறந்த காப்புறுதி திட்டமாக அமைந்துள்ளது. பல்வேறு தெரிவுகளில் ஓய்வூதியத்தை காப்புறுதிதாரருக்கு பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான தெரிவை காப்புறுதிதாரர் மேற்கொள்ள முடியும். காப்புறுதிதாரர் முதலீடு செய்யும் தொகை, வருடாந்தம் வளர்ச்சியடையும் வகையில் அமைந்த நிதியத்தில் பேணப்படுகின்றது. இந்த காப்புறுதி திட்டத்தின் நெகிழ்ச்சித்தன்மையின் காரணமாக, காப்புறுதிதாரருக்கு மேலதிகமாக வருமானம் கிடைக்கும் தருணங்களில் அந்த தொகையையும் இந்த காப்புறுதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதுமைக்காலத்தில் பெற்றுக் கொள்ளும் முதிர்வுத்தொகையும் அதிகரிக்கும்.

காப்புறுதிதாரர் தமது தொழில் வாழ்விலிருந்து ஓய்வுபெறும் போது, தமது ஓய்வூதிய திட்டத்திலிருந்து வரிவிலக்கழிக்கப்பட்ட தொகை பணத்தை அல்லது தவணை முறையில் பெறும் வகையிலான வரி விலக்கழிக்கப்பட்ட வருமானத்தை வாழ்நாள் முழுவதும் பெறுவார். காப்புறுதிதாரர் தமது ஓய்வூதியம் பெறும் காலத்தை 10, 15 அல்லது 20 வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதுக்கும் என நிர்ணயித்துக் கொள்ள முடியும். பணவீக்கம் மற்றும் வருமானத் தேவை போன்றவற்றுக்கு அமைய மாதாந்தம் வழங்கப்படும் தொகை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது.

'ஒவ்வொரு காப்புறுதிதாரருக்கும் அவர்களின் தேவைக்கேற்ப வகையில் அமைந்த காப்புறுதி திட்டம் அமைவதை எமது காப்புறுதி ஆலோசகர்கள் உறுதி செய்கின்றனர். முதற்கட்டமாக நீங்கள், எமது காப்புறுதி ஆலோசகர் ஒருவருடன் கலந்தாலோசிப்பதன் மூலம், உங்கள் ஓய்வூதிய காலப்பகுதியில் எந்தளவு தொகையை பெற்றுக் கொள்வீர்கள் என்பது குறித்தும், உங்கள் ஓய்வூதிய வயதில் நீங்கள் பெற விரும்பும் தொகைக்கு, எவ்வளவு தொகையை வைப்பிலிட வேண்டும் போன்ற விடயங்களை கணித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் விரும்பும் மூலங்களில் அதிகளவு தொகையை செலவளித்துக் கொள்ள முடியும்' என ஜனசக்தி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் சிஹாரா டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.

ஜனசக்தி சிறப்பான நிதி உறுதித் தன்மையும், நட்ட ஈடுகளை செலுத்திய ஆவணங்களையும் கொண்டுள்ளது. பட்டியலிடப்பட்டுள்ள காப்புறுதி கம்பனிகளிடையே மொத்தமாக 1.49 பில்லியன் ரூபாவை மூலதனமாக கொண்ட காப்புறுதி நிறுவனமாகும். இதில் 12.7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும், 7 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருடாந்த மொத்த தேறிய தவணைக் கட்டணங்களையும் கொண்டுள்ளது. காப்புறுதிதாரர்களுக்கு 20 பில்லியன் ரூபாவை நட்ட ஈடாக  வழங்கியுள்ளதுடன், 'ஏ' தரம் பெற்ற காப்புறுதி நிறுவனங்களின் உந்துசக்தியையும் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .