2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

லைப்போய் ஷம்போவிடமிருந்து அதிர்ஷ்டமிக்க வாடிக்கையாளர்களுக்கு கணினிகள்

A.P.Mathan   / 2013 ஜூன் 27 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக பிரசித்தி பெற்ற யுனிலீவர் நிறுவனத்துக்கு உரித்தான லைப்போய் வர்த்தக நாமத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் ஷம்போ இலங்கை வாழ் மக்களிடையே பிரசித்தமான உற்பத்தியாகும். இவ் லைப்போய் தமது வாடிக்கையாளர்களை இலக்குவைத்து நடாத்தப்பட்ட புத்தம் புதிய ஊக்குவிப்பு வேலைத்திட்டமான 'லைப்போய் கணினி அதிர்ஷ்டம்' அதிசிறந்த முறையில் அண்மையில் நிறைவுற்றது.
 
இவ் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் அதிர்ஷ்டசாலிகளாக தெரிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் இருபது பேருக்கு பரிசில்களாக கணினிகளை வழங்கும் வைபவம் அண்மையில் யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பிரதான அலுவலகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
 
இவ் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திற்கு தகுதி பெறுவதற்காக வாடிக்கையாளர்களுக்கு லைப்போய் செஷே வெற்றுப் பெக்கட்கள் இரண்டினை தமது பெயர் விலாசம் என்பவற்றைக் குறிப்பிட்டு யுனிலீவர் நிறுவனத்துக்கு அனுப்புவது மட்டுமேயாகும். 2013 ஏப்ரல் முதல் மே மாதம் வரை கிடைக்கப்பெற்ற 25,000இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து இவ்வேலைத்திட்டத்திற்கு மக்கள் மத்தியிலிருந்த வரவேற்பு மற்றும் லைப்போய் ஷம்போவிற்கு மக்கள் மத்தியிலிருக்கும் கவர்ச்சிகரமான ஆர்வம் என்பவற்றை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
 
இவ்வேலைத் திட்டத்தின் வெற்றியாளர்களான இருபது பேரும், அரச நிர்வாக அமைச்சின் அதிகாரிகளது கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
லைப்போய் ஷம்போ உற்பத்திகள் இவ் வேலைத்திட்டத்தின் மூலம் இன்னும் இன்னும் மக்கள் உள்ளத்தை நெருங்கியமை குறித்து லைப்போய் ஷம்போவின் வர்த்தகக் குறி முகாமையாளர் மிலிந்த வீரசிங்ஹ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 'கடந்த தசாப்த காலத்துக்குள் வியாபாரச் சந்தையை மிகவும் லாவகமான முறையில் வென்றெடுத்த லைப்போய் ஷம்போ வர்த்தக நாமமானது, இலங்கை வாடிக்கையாளர்களின் தன்னிகரற்ற நம்பிக்கையை வென்றிருக்கின்றமை விஷேட அம்சமாகும். சந்தையில் முன்னிலை வகிப்பதற்கு எம்மால் இயலுமானதற்குரிய பிரதான காரணம் எமது வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையினாலேயே ஆகும். இவ்வாறான வெற்றிகரமான பயணத்தை முன்னெடுப்பதற்கு கைகொடுத்துதவிய எமது கௌரவமிக்க வாடிக்கையாளர்களை நன்றி பாராட்டுவதற்கு இது மிகவும் உகந்த தருனமாகவே நாம் கருதுகின்றோம்.'
 
லைப்போய் ஷம்போ Herbal, Health மற்றும் Anti-Dandruff ஆகிய மூன்று உற்பத்திகளையும் இந்நாட்டு வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கு யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம் செயற்பட்டிருக்கின்றது. அத்துடன், இவ் உற்பத்திகள் தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் காரணத்தினால், உறுதிமிக்க பளபளக்கும் கூந்தலை பெற்றுக் கொடுத்தல், பொடுகினை இல்லாதொழித்தல், ஆகிய குணாதிசயங்களுடன் கூடியது.
 
'லைப்போய் ஷம்போ இலங்கையின் முதன்மை ஷம்போ நாமங்களுள் ஒன்றாவதுடன் இது எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற வர்த்தக நாமமாகத் திகழ்கின்றது. இதற்குரிய காரணம் என்னவெனில், எமது உற்பத்தி, தரத்தில் மிக உயர்ந்தவையாகவும் கையிலிருக்கும் பணத்திற்கு குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றமையாகும். இவ் வர்த்தக நாமத்தை இன்னும் மெருகூட்டி எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்' என யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் கூந்தல் சிகிச்சைப் பிரிவின் தலைவர், திருமதி வத்சலா அளுத்கெதர தெரிவித்தார்.
 
அத்துடன், இவ் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தில் கணினியொன்றை வென்ற அம்பலந்தோட்டை நிஷாந்த குமார் லியனாரச்சி அவர்கள் புன்முறுவலுடன் தனது வெற்றியைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், 'நீண்ட காலமாக லைப்போய் ஷம்போவினை பாவிப்பனாக இவ் வெற்றியை எண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது' எனத் தெரிவித்தார்.
 
இன்னுமொரு வெற்றியாளராகிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவியாகிய சீப்புகுலம, பனாவௌ சீ, இனை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி துஷானி மதூஷிகா தனது வெற்றியைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், 'நான் கணினியொன்றை வென்றிருப்பதாக, நான் கன்னோருவ தலைமைத்துவப் பயிற்சியில் பங்குபற்றிக் கொண்டிருந்த வேளையில் அறியக்கிடைத்தது. உண்மையிலேயே, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவி. எனக்கு வீட்டில் பாவிப்பதற்கு கணினியொன்று இருக்கவில்லை. தென் கொரியாவில் தொழில் புரியும் எனது கணவருடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவை ஏற்படுமிடத்து, நான் நகரிலுள்ள இன்டர்நெட் கெஃபே இற்கு சென்று தான் ஸ்கைப் மூலமாக தொடர்பு கொள்வேன். அதனால், கிடைக்கப்பெற்ற இக்கணினியானது, சகல விதத்திலும் எனக்கு பயனுள்ளதாகவே உள்ளது.' எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .