2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கை – சீசெல்ஸ் வர்த்தக செயலமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீசெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற இலங்கை – சீசெல்ஸ் வர்த்தக செயலமர்வில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
 
இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு நிலவும் வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விளக்கங்களையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோர் வழங்கியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .