2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கையின் வர்த்தகங்கள் மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்து கலந்தாலோசனை

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து வர்த்தகங்கள் தமது நிறுவனங்களுக்கான மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்து கலந்தாலோசனை செய்வதற்கான நிபுணர்கள் ஒன்றுகூடல் ஒன்றை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
 
அண்மையில் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தின் மூலம் வர்த்தக நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் போன்றவற்றின் மின்சார கட்டணங்கள் 20 – 30 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை வர்த்தக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஜூலை மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சம்மேளனம் அறிவித்துள்ளது. 
 
றிசோர்ஸ் மனேஜ்மன்ட் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான திலக் சியம்பலாபிட்டிய, இலங்கை மின்சார சபையின் கூட்டாண்மை கொள்கை பிரிவின் மேலதிக பொது முகாமையாளர் பந்துல திலகசேன ஆகியோர் இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .