2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சாக் நாடுகளின் 'பியுச்சர் கவ்' உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவேற்றம்

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க நாடுகளின் 'பியுச்சர் கவ்' உச்சி மாநாடு அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ற் விடுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது. 
 
முதல் நாள் ஆரம்பத்தில் இடம்பெற்ற அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக தலைமையுரையுடன் ஆரம்பமானது. அரசாங்கத்தின் புதிய வலை நுழைவாயில் அங்குரார்ப்பணம் (www. gov.lk), முதல் நாள் இறுதிக்கு முதல் இடம் பெற்ற 'மாபெரும் விவாதம்' மற்றும் இரண்டாம் நாள் நடுப்பகுதியில் இடம் பெற்ற இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் என்பன இந்த மாநாட்டின் சிறப்பம்சங்களாகும். 
 
15 நிமிடங்களைக் கொண்ட தேசிய மற்றும் வெளிநாட்டு தலைமை உரைகள், 40 நிமிடக் குழுக் கலந்துரையாடல்கள் ஆறு மற்றும் பல ஐந்து நிமிட நேரடிப் பதில்கள், உட்பட்ட நிகழ்ச்சி நிரல் பாகங்கள் இவ் ஒன்றரை நாள் மாநாட்டை உற்சாகமூட்டும் மாநாடாக அமைய ஏதுவாகின. 
 
கலந்துரையாடலில் பங்குபற்றிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச தரப்பைச் சேர்ந்த திலங்க சுமதிபால மற்றும் பிரதான எதிர்கட்சியைச் சேர்ந்த எரன் விக்ரமரத்ன அவர்கள் ஆவர்.  
 
பியுச்சர் கவ் என்பது அரசாங்கங்கள் தாம் மக்களுக்கு வழங்கும் சேவையினை செம்மையாகப் புரிவதை ஊக்குவிக்கும் ஒரு பிராந்திய அமைப்பாகும். பியுச்சர் கவ் ஏஷியா என்னும் சஞ்சிகையினால் 2007ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் சேவைகளை உயர் மட்டத்துக்குக் கொண்டு செல்ல ஊக்குவிக்கும் நோக்குடன் இவ் அமைப்பு செயல்படுகிறது. பியுச்சர் கவ் பற்றி பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் அல்லது 'சாக்' அமைப்பின் இரண்டாம் உச்சி மாநாடும்  'பியுச்சர் கவ்வின்' இலங்கை மன்றத்தின் நான்காம் மாநாடும் ஆகிய ஒரே மாநாடு இவ்வாறு நடைபெற்றது. இம் மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் சகல நாடுகளிலிருந்து ஏறத்தாழ 200 பிரதிநிதிகள் பங்குபற்றினர். இதன்படி விசேடமாக இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், பங்காளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உட்பட்ட நாடுகளின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப விற்பன்னர்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர். 
 
தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கும் சேவையை மிகத் திறமையாக ஆற்றுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட இம் மாநாட்டில் பல விடயப் பிரிவுகளுக்குக் கீழ் சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 
 
இவ் விடயப்பிரிவுகளுள் கணினி மய உள்சேர்த்துக்கொள்ளல் அல்லது டிஜிற்றல் இன்குலூஷன், கைத்தொலைபேசி அரச சேவை, தகவல் பாதுகாப்பு, அரச சேவைக்காக மேக தொழில்நுட்பம் அல்லது குலவுட் டெக்நொலொஜி பொ கவன்மன்ட் சர்விசஸ், இ-சுகாதாரம் அல்லது எம்-சுகாதாரம் ஆகிய விடயப் பிரிவுகளும் அடங்கின.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .