2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தாய் - சேய் சுகாதார அபிவிருத்திக்கு கைகொடுக்கும் 'நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் பெண்டா பேபி'

A.P.Mathan   / 2013 ஜூலை 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


நோயற்ற எதிர்கால சந்ததியை கட்டி எழுப்புவதற்கு தாய், சேய் சுகாதாரம் மிக முக்கியமாகும். ஆகையால் தாய் சேய் சிகிச்சைகளை முன்னெடுக்கும் வைத்தியசாலைகளின் சேவைகளை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதன் ஊடாக அவர்களுக்கான சுகாதார சேவையை மேம்படுத்திக் கொள்ளலாம்.
 
இந்த தேசிய தேவையை உணர்ந்துகொண்ட இலங்கையின் முதற்தர சிறுவர்களுக்கான உற்பத்தியான 'நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் பெண்டா பேபி' தயாரிக்கும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தாய் - சேய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக 'நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் பெண்டா பேபி' என்ற பெயரில் பல்வேறு செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ளது. அதனூடாக நோயற்ற சிறுவர் சமுதாயமொன்றை உருவாக்குவதே 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் பெண்டா பேபியின்' பிரதான நோக்கமாகும். 
 
மஹரகம தேசிய வாய் சுகாதார நிறுவனத்தின் நீண்டகால தேவையாக நிலவிய சிகிச்சை அட்டைகளை வழங்குவதற்கு 'நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் பெண்டா பேபி' அண்மையில் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை ஊடாக தேசிய வாய் சுகாதார நிறுவனத்தின் சிறுவர்களுக்கான சிகிச்சை பிரிவின் செயற்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன. அதுதவிர சிகிச்சை பிரிவுக்கு வர்ணம் பூசி சிகிச்சைக்கு வரும் தாய் சேய் ஆகியோருக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்கும் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.  
 
பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் தாய் மற்றும் சேய் மருத்துவ பிரிவான கேத்துமதி பிரிவை புனரமைக்கவும் 'நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் பெண்டா பேபி' நடவடிக்கை எடுத்தது. இது பாணந்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலிருந்து வருகைதரும் தாய் மற்றும் சிறுவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடு முழுவதிலும் பல பகுதிகளில் அமைந்துள்ள தாய் மற்றும் சிறுவர் சிகிச்சை மத்திய நிலையங்களை புனரமைக்க 'நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் பெண்டா பேபி' எதிர்பார்த்துள்ளதுடன் அத்தகைய தேவைகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.  
 
அதற்கமைய இலங்கையின் முதல்தர மூலிகை ஒப்பனைப் பொருட்களான நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ்  உற்பத்திகளை தயாரிக்கும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பெருமையான உற்பத்திகளாக பெண்டா பேபி சிறுவர் உற்பத்திகளை கூறலாம். பெண்டா பேபி கொலோன், பெண்டா பேபி வொஷ், பெண்டா பேபி கிறீம், பெண்டா பேபி பவுடர், பெண்டா பேபி ஷம்பூ, பெண்டா பேபி நெப் வொஷ் ஆகியவற்றை குறிப்பிடலாம்.   
 
ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட GMP மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO 9001 மற்றும் ISO 14001 ஆகிய தரச்சான்றிதழின் கீழ் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் உற்பத்திகளை மேற்கொள்கின்றது. புதிய தொழில்நுட்பத்துடன் அமைந்த கைத்தொழிற்சாலையில் தமது உற்பத்திகளை முன்னெடுக்கின்ற நிறுவனம் தொழிற்சாலையை சூழ 500 இற்கும் அதிகமான விசேடமான இயற்கை மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. தமது ஆராய்ச்சிகளுக்காக ஆய்வு நிலையமொன்றை அமைத்த ஒரே ஒரு தனியார் நிறுவனமாகவும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன் விளங்குகின்றது. மிகவும் பழமைவாய்ந்த மூலிகைகளை பாதுகாக்கும் நோக்கில் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .