2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

எண்ணெய் அகழ்வில் ஈடுபட இலங்கை நிறுவனம் தீர்மானம்

A.P.Mathan   / 2013 ஜூலை 08 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கையைச் சேர்ந்த சிலோன் எனெர்ஜி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
 
எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ள நிலையில், வழமையாக அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு மேலதிகமாக இந்த நிறுவனம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
 
தம்மிடம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்ட நிபுணர்கள் குழாம் காணப்படுவதாகவும், தாம் இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வத்துடன் காணப்படுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் ஹரி குலசிங்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .