
இலங்கையின் ஆண்கள் ஆடைத் துறையில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமாக திகழும் ஹமீடியா, இலங்கையிலுள்ள அனைத்துத் தந்தையர்களுக்காகவும் நடாத்திய மனமகிழ்ச்சி தரக்கூடியதும் இவ்வாறான ஒரேயொரு முன்னெடுப்புமான விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தில், கொழும்பு 4 யைச் சேர்ந்த சுரங்க பெர்ணான்டோ சிங்கப்பூர் சென்று திரும்புவதற்கான 03 இருவழி விமானப் பயணச் சீட்டுக்களை வென்றெடுத்துள்ளார்.
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் இரண்டரை வார காலப்பகுதியில் கிடைக்கப் பெற்ற நூற்றுக் கணக்கான நுழைவுப் பத்திரங்களுள் அவரது மகளான கியாரா பெர்ணான்டோ (பிஷப் கல்லூரியில் தரம்-5 இல் கற்பவர்) தனது தந்தை பற்றி எழுதியிருந்த கடிதமும் ஒன்றாகும். மாபெரும் இறுதிப் பரிசுக்கு மேலதிகமாக, இரவு விருந்திற்காக 15 அதிர்ஷ்டசாலி குடும்பங்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் 'ஐந்து நட்சத்திர' உணவருந்தும் அனுபவம் ஒன்று வழங்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.
'அண்மைக் காலங்களில் இதுவரைக்கும் நாம் முன்னெடுத்த தந்தையர் தின விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கைகளுள் இது மிகவும் நிகரற்ற ஒன்றாக அமைந்துள்ளது. இது தொடர்பாக உருவாகியிருந்த ஆர்வம் எம்மை திக்குமுக்காடச் செய்த அதேவேளை, இதற்காக அனுப்பப்பட்ட சில நுழைவுப் பத்திரங்கள் ஊக்கமளிப்பதாகவும் ஆழமான உணர்வு மாற்றத்தை தருவதாகவும் காணப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், அதிகளவிலான நுழைவுப் பத்திரங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கிடைக்கப் பெற்றதாகும். இவ்வாறான நிகழ்வுகள் கொழும்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது' என்று ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் தெரிவித்தார்.
சிங்கப்பூர் சென்று திரும்புவதற்கான (இருவழி) விமானப் பயணச் சீட்டுக்களை வென்றெடுத்த சுரங்க பெர்ணான்டோ கூறுகையில், 'ஒன்றல்ல - மூன்று விமானப் பயணச் சீட்டுக்களை வென்றெடுத்தமை எனக்கு ஆச்சரியமானதாகவும் அதேநேரம் சந்தோசமானதாகவும் இருந்தது. நவநாகரிகம் என்று வருகின்ற போது ஹமீடியா நிறுவனமானது நவீன பாணியில் அதிலுள்ள விடயங்களைச் செய்கின்றது என்பதை நானறிவேன். அவ்வாறே, அந்நிறுவனம் 'தந்தையர் தின' ஊக்குவிப்புத் திட்டத்தை முன்னெடுத்த வேளையிலும் எம்மை அதிருப்தியடையச் செய்யவில்லை. இனிய மாலைப் பொழுதில் வசீகரமான அழகுடன் சிறப்பான முறையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரிசுப் பொருட்கள் இவையனைத்தையும் மேலும் விஷேடமானதாக மாற்றியமைத்தன. இந்த நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு மிகவுன்னத சேவையை ஆற்றியுள்ள ஹமீடியா நிறுவனத்தின் 'My Friend' போன்ற கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்களாலும் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். வெற்றிபெற்ற இந்த கட்டுரையை எனது மகள் எழுதிய வேளையில் ஒருபோதும் அதனை என்னிடம் காட்டவில்லை. 'வெற்றியாளர்களின் இரவு விருந்து' நிகழ்வுக்கு நாம் அழைக்கப்பட்ட பின்னரே அக் கட்டுரையை மகள் எனக்கு காண்பித்தார். என்னைப் பற்றி அவர் அதில் விபரித்திருந்த விடயங்கள் எனது கண்களில் நீரை வரவழைத்தன' என்றார்.
மே 15ஆம் திகதியில் இருந்து ஜூன் 02ஆம் திகதி வரை இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது – 'உங்களது தந்தையை எந்த விடயம் சிறப்புமிக்கவராக ஆக்குகின்றது' என்ற தலைப்பின் கீழ் குறுகிய ஆக்கம் ஒன்றை எழுதி, அண்மையில் எடுக்கப்பட்ட குடும்பப் புகைப்படத்துடன் இணைத்து அந்த ஆக்கத்தை ரத்மலானையிலுள்ள ஹமீடியா தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு 'ஹமீடியா விசுவாச வாடிக்கையாளர் கழகத்தின்' (Hameedia Loyalty Club) அனைத்து உறுப்பினர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதிர்ஷ்டசாலி வெற்றியாளரை சீட்டிழுப்பு மூலம் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக 'ஒரு தந்தையின் பெறுமதி' என்ற தொனிப்பொருளில் உரையாற்றுவதற்காக தலைசிறந்த பயிற்றுவிப்பாளரும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான தம்மிக்க கலபுகேவும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.
ஹமீட் மேலும் கூறுகையில், 'தந்தையர் தினத்தைக் கொண்டாடுகின்ற சர்வதேச பாரம்பரிய நடைமுறையில் இப்போது இலங்கையும் ஒரு அங்கமாக திகழ்கின்றது. இலங்கையின் நாட்காட்டியில் வழமையாக உள்ளடக்கப்படுகின்ற ஒரு நிகழ்வாக இது தற்போது காணப்படுவதுடன், இந்நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களினால் கொண்டாடப்பட்டுள்ளது. எமது நிறுவனம் நடாத்திய இந்த போட்டியானது தந்தையரை மட்டும் உள்ளடக்காமல் முழுக் குடும்பத்தையும் உள்வாங்கியதாக காணப்படுகின்றது. மிகச் சிறந்த ஒரு நபராக திகழ்வதற்கு தமக்கு யாருடைய நடத்தை ஊக்கமளித்ததோ, அந்த நபரை தம்முடைய 'முன்மாதிரியாக' பெயர் குறிப்பிடுவதற்கான வாய்ப்பினை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்தவர்களாக உள்ளோம். உண்மையான ஆடைகளை அணிவதன் மூலம், உண்மையான ஆண்களாக திகழுமாறு இலங்கையர்கள் அனைவருக்கும் ஊக்குவிப்பு அளிக்கும் எமது தாரகமந்திர வரிகளான 'Real Men' என்பதற்கு ஒத்திசைவானதாகவும் இம்முயற்சி அமைந்துள்ளது' என்று குறிப்பிட்டார்.